Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10286
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Jena, Y. | - |
dc.contributor.author | Sheranjan, S. | - |
dc.date.accessioned | 2024-03-22T07:16:44Z | - |
dc.date.available | 2024-03-22T07:16:44Z | - |
dc.date.issued | 2024 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10286 | - |
dc.description.abstract | புலம்பெயர் எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரகௌரி சிவபாலனுடைய படைப்புக்களில் சமூக அனுபவ வெளிப்பாடுகளை விமர்சன நோக்கில் ஆராய்வதாக இந்த ஆய்வு அமைகிறது. இதற்கு சந்திரகௌரி சிவபாலனின் கவிதைத் தொகுப்பாகிய 'பனிக்குடம்' சிறுகதைத் தொகுதியாகிய 'வெள்ளையுடைக்குள் கரையும் பருவம்' மற்றும் நாவலாகிய 'என்னையே நானறியேன்' ஆகியன ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. புலம்பெயர்ந்தோர் எனப்படுவோர் 1970களை அடுத்து ஈழத்தில் நிலவிய இனமுரண்பாட்டுச் சூழல் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து ஐரோப்பா, அவுஸ்திரேலியா, வடஅமெரி;க்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து சென்றோராவர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தாம் அனுபவித்த இனப்பிரச்சனை சார்ந்த சிக்கல்களினையும் அவற்றினால் அடைந்த வலிகளையும் தாம் எதிர்கொண்ட புதிய பண்பாட்டு மாறுதல்களினையும் இலக்கியங்கள் வழி பேச முனைந்தனர். அப்படைப்புக்கள் வாழ்க்கை அனுபவத்தின் வழி தாயக மற்றும் புகலிடச் சமூக பண்பாட்டு அரசியல் முறைகளைப் பேசுகின்றன. குறிப்பாக் கூறின், இவை புலம்பெயர்ந்தோரின் சமூக, பண்பாட்டு, அரசியல், முறைகளைப் பேசுகின்றன. குறிப்பாகக் கூறின், புலம்பெயர்ந்தோரின் சமூக அனுபவத் திரட்சிகளாக விளங்குகின்றன. சந்திரகௌரி சிவபாலனின் படைப்பிலக்கியங்களைக் கோட்பாட்டு ரீதியில் பன்முகவாசிப்புக்குட்படுத்தி அவற்றின் வழி அவரின் புலம்பெயர்ந்த தனி மனித சமூக அனுபவங்களை விளங்கிக் கொள்ள முனைவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். மேலும் சமூக அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறான எடுத்துரைப்பியல் முறையினை அவர் கையாண்டிருக்கின்றார் என்பது பற்றியும் இங்கு நோக்கப்படுகின்றது. இவ்வாய்வில் விபரண முறை, விமர்சன முறை மற்றும் ஒப்பீட்டு முறை என்பன பிரதானமாகப் பணன்படுத்தப்பட்டுள்ளன. அவரின் படைப்புக்களின் ஊடாக புலம்பெயர் மற்றும் ஒப்பீட்டு முறை என்பன பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவரின் படைப்புக்களின் ஊடாக புலம்பெயர் மற்றும் தாயக சமூக பண்பாட்டு விடயங்களை நோக்கும் போது, சமூகவியல், பண்பாட்டியல், வரலாற்றியல் அணுகுமுறைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அவரின் படைப்புக்கள் சார் எடுத்துரைப்பியலைப் பேசுகின்ற போது அழகியல் முறைத்திறனாய்வு பயன்படுத்தப்படுகின்றது. அவருடைய படைப்புக்களில் பெண்ணியம் முதன்னிலைப்படுத்தப்படுவதினால் பெண்ணியக் கோட்பாடும் தேவையான இடங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் சந்திரகௌரி புலம்பெயர் தேசங்களில் ஈழத்தவர்கள் எதிர்கொள்கின்ற சமுதாயப் பிரச்சினைகளையும் சமூக பண்பாட்டு மாறுதல்களினையும் எவ்வாறு தாக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. மேலும் பல ஆண்டுகளாக நிலவி வந்த புலம்பெயர் தேசத்து மக்களின் சொல்லமுடியாத துயரங்களினையும் அவர்கள் எதிர்நோக்கிய சவால்களினையும் அவர் எவ்வாறு கலைத்துவமாக பேசியுள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. | - |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | சந்திரகௌரி சிவபாலன் | - |
dc.subject | புலப்பெயர்வு | - |
dc.subject | சமூக அனுபவங்கள் | - |
dc.title | புலம்பெயர்ந்தோர் சமூக அனுபவங்களின் வெளிப்பாடாக சந்திரகௌரி சிவபாலனின் படைப்புக்கள் பன்முகப்பார்வை | en_US |
dc.type | Conference paper | en_US |
Appears in Collections: | URSA 2024 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
புலம்பெயர்ந்தோர் சமூக அனுபவங்களின் வெளிப்பாடாக.pdf | 698.41 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.