Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10751
Title: ஓட்டிஸ பிள்ளைகள் எதிர்கொள்ளும் மொழிநிலைச் சவால்கள்
Authors: Shiromi, M.
Srisatkunarajah, S.
Keywords: ஓட்டிஸம்;உளமொழியியல்;மொழிநிலைச் சவால்கள்;மொழிப்பிரயோகம்;மொழியினை புரிந்து கொள்தல்
Issue Date: 2016
Publisher: Eastern University, Sri Lanka
Abstract: ஓட்டிஸம் என்பது குழந்தைகளின் உள்ள மற்றும் மூளையின் அசாதாரண வளர்ச்சி காரணமாக அவர்களது அறிவு மற்றும் நடத்தைகளில் ஏற்படும் மாற்றத்தின் மூலமான குழப்ப நிலையாகும். அதாவது ஓட்டிஸமானது நரம்பியல் ரீதியான விருத்தி நிலையில் ஏற்படுகின்ற குறைபாடாகப் பார்க்கப்படுகின்றது. இன்று உலகளாவிய ரீதியில் நூறு குழந்தைகளிற்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் ஓட்டிஸம் காணப்படுகின்றது. இலங்கையில் அதிர்ச்சியான தகவலாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியரான ஹேமமாலினி பெரேராவின் ஆய்வின்படி 93 பிள்ளைகளில் ஒரு பிள்ளை என்ற விகிதத்தில் ஓட்டிஸம் காணப்படுகின்றது. அவர்களிடம் காணப்படுகின்ற வேறுபட்ட நடத்தைக் கோலங்களை சமூக இடையறவு பாதிப்பு. ஆர்வங்கள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக இருத்தல் என்ற அடிப்படையில் பார்க்க முடியும். அதாவது இப்பிள்ளைகள் ஏனையவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும். பேச்சுத் தொடர்பாடல் மேற்கொள்வதற்கும் விரும்பாமல் தமது சுயவிருப்பத்திற்கு ஏற்ப செயற்படும் நிலையைக் கொண்டிருப்பர். இத்தகைய பிள்ளைகள் எதிர்கொள்ளும் மொழி ரீதியான சவால்களை ஆழமாக வெளிப்படுத்திக் காட்டுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். அந்த வகையில் இவ்ஆய்வுக்கட்டுரையானது ஓட்டிஸப் பிள்ளைகளது மொழியினைப் புரிந்து கொள்ளுதல், மொழிப்பிரயோகம் என்ற அடிப்படையில் உளமொழியியல் அணுகுமுறையின் ஊடாகவும், மற்றும் மொழி, பேச்சுக் குறைபாடுகளைக் கண்டறிதலும், நிவர்த்தி செய்தலும் என்ற அடிப்படையில் சிகிச்சை மொழியியல் நோக்கிலும் பார்க்கப்படுவதுடன் இவ் ஆய்வுக்கட்டுரைக்கான முதல்நிலைத் தரவுகளானவை யாழ்ப்பாண கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் உள்ள ஓட்டிஸப் பிள்ளைகளில் மேற்கொண்ட கள் அவதானிப்புக்கள் மற்றும் ஓட்டிஸ தனியாள் தொடர்பான இறுவெட்டுக்கள் போன்றவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத்தரவுகளானவை பத்திரிகை, சஞ்சிகைக் கட்டுரைகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது. வெளிப்பாடாக ஓட்டிஸப் பிள்ளைகளின் மொழிநிலைச் சவால்களை எடுத்துக் காண்பிப்பதன் மூலம் ஓட்டிஸம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு மொழிச் சிகிச்சை முறைகளை விருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தினை சுட்டிக்காட்டும் நோக்கத்தினடிப்படையிலும் இவ் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10751
ISBN: 978 955 1443 80 1
Appears in Collections:Linguistics and English



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.