Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10756
Title: இருமொழிய சமூகச்சூழலில் மொழிமாறும் இயல்புகள்
Authors: Shiromi, M.
Keywords: இருமொழியச் சூழல்;மொழி மாற்ற இயல்புகள்;தமிழ்-சிங்கள சமுதாய-மொழியியல் கூட்டிணைப்பு;சமுதாய மொழியியல்
Issue Date: 2023
Publisher: University of Jaffna
Abstract: மொழி என்பது மனித எண்ணக்கருத்துக்களின் வெளிப்பாடுகள் என்ற அடிப்படையில் பேச்சொலிகள் இணைந்து சொற்களை உருவாக்கி சொற்களின் இணைப்பின் ஊடாக தொடர்களும் வாக்கியங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் மனிதன் தான் வாழும் சமூகச்சூழலுடன் பிணைந்து வாழ்பவன் என்ற அடிப்படையில் அவனால் பேசப்படும் மொழியானது சமூக நடத்தையின் உற்பத்தியாக தொடர்பாடலின் வடிவமாக பரிணமித் துள்ளது. அவ்வகையில் இருமொழிய சமூகச் சூழலில் இணைந்து வாழும் மக்களது மொழி வடிவமானது அவர்களது சமூகக்கூட்டிணைப்பிற்கு ஏற்ப மாற்றத்திற்குள்ளாக்கப்படுவது இயல்பு. அந்த வகையில் இவ்வாய்வானது இலங்கையில் தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து வாழும் இருமொழிய பிரசேங்களில் தமிழ் மொழியினை முதல் மொழியாகக் கொண்டவர்க ளது மொழிப்பிரயோகங்களில் ஏற்பட்டுள்ள மொழி மாற்றங்களை கண்டறிந்து அவற்றைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் மொழியியல் கூட்டிணைப்பின் மாற்றங்களை நிறுவிக்காட்டுவ தனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் வாய்விற்கான ஆய்வு முறையியலாக சமுதாய மொழியியல் அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. முதல்நிலைத் தரவுகளானவை இரு மொழி பிரதேசங்களான அம்பாறை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, சிலாபம், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களைச் சேர்ந்த 50 பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப் பட்ட கலந்துரையாடல், வினாவிடை அவதானிப்பு ஆய்வுமுறைகள் என்பவற்றின் ஊடாக திரட்டப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக மொழி மாற்ற இயல்புகள் தொடர்பில் ஏற்கனவே வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் என்பன எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறான நெறிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இலங்கையில் தமிழ்-சிங்கள இருமொழிய சமூகச் சூழலின் விளைவாக அச்சமூகச்சூழலில் வாழும் தமிழர்களது தமிழ் மொழிக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மொழி மாற்ற இயல்புகளா னவை மொழியியல் ரீதியில் வகைப்படுத்தப்பட்டு, மொழியியல் கூட்டிணைப்பின் மொழிமாற்ற இயல்புகளானவை பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் முன்வைக்கப் பட்டுள்ளதுடன் அவற்றுக்கான காரணங்களும் விளைவுகளும் பகுப்பாய்வினடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ளன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10756
ISSN: 2478-1061
Appears in Collections:Linguistics and English



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.