Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10774
Title: சமூகமாற்றத்துக்கான இசை - மாயூரம் நேதநாயகம்பிள்ளை அவர்களது சர்வ சமயசமரசக் கீர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசையியலாய்வு
Authors: Suhanya, A.
Keywords: இசை;கீர்த்தனம்;சமூகப்படிமம்;சர்வ சமய சமரசம்;பண்பாடு
Issue Date: 2018
Publisher: Eastern University, Sri Lanka
Abstract: தமிழ் இசை வரலாற்றிலே பல வாக்கேயகாரர்கள் தோன்றி இசை வளர்த்திருக்கின்றார்கள். காலந்தோறும் பெற்ற வாக்கேயகாரர்கள், அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய அனுபவங்கள் வெளிப்படுத்துவதற்குரிய வடிகாலாக இசையினைத் தெரிந்திருப்பதை வரலாறுகள் வாயிலாகத் தெரிந்துகொள்ளமுடிகின்றது. இந்நிலையிலே இவர்களது அனுபவ வெளிப்பாடுகளாக இவர்களது படைப்புக்கள் அமையப் பெற்றிருக்கக் காணுகின்றோம். பொதுவாகவே கலையின் தத்துவம் பற்றிப்பேசுகின்ற போது, கலைஞள் தான் வாழும் சமூகத்தைப் பிரதிபலிப்பவன் என்கின்ற ஒரு கருத்தும் கலைத் தத்துவவாதிகளால் முன்வைக்கப்படுகின்ற, ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு தத்துவமாகும். கலையானது சமூகத்தின் கண்ணாடி என்கின்ற கலைத்தத்துவம் இசைக்கலைக்கும் பொருந்தி இசைக்கலை வரலாற்றின் ஒவ்வொரு கணத்திலும் கற்போர்க்கு நினைவுறுத்திக்கொண்டிருப்பதை வரலாற்றுப்பதிவுகள் வாயிலாhhகக் காணமுடிகின்றது. இந்த வகையிலே கிபி 19ம் நூற்றாண்டிலே தஞ்சையிலே பிறந்து தென்னிந்திய இசைவரலாற்றிற்குப் பங்காற்றியவர்களுள் முக்கியமானவராக மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் கருதப்படுகின்றார். இவரது படைப்புக்கள் தென்னிந்திய இசை வரலாற்றிற்கு ஒரு புதிய பரிமாணத்தையே கொடுத்தது என்றால் கூட மிகையில்லை. இதன் பின்னணியிலே கிபி 19ம் நூற்றாண்டிலே வாழ்ந்து சென்றிருக்கின்ற இசை வாக்கேயகாரர் மாயூரம் வேதநாகம் பிள்ளை அவர்களது படைப்புக்கள் பற்றியும், அவரது படைப்புக்கள் எத்துணைதூரம் தென்னிந்திய இசை வரலாற்றிற்குப் பங்களிப்புச்செய்திருக்கின்றது என்பது பற்றியும் இவ்வாய்வுக்கட்டுரை தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10774
Appears in Collections:Department of Music

Files in This Item:
File Description SizeFormat 
சமூகமாற்றத்துக்கான இசை.pdf729.47 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.