Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10790
Title: ஈழத்து நாட்டியநாடகப் பிரதியில் இசை – மரபும் மாற்றமும்
Authors: Suhanya, A.
Keywords: பாத்திரப்படிமம்;கலைவெளி;புதியது படைத்தல்;பேசாப்பொருள்;போலச்செய்தல்
Issue Date: 2021
Publisher: University of Peradeniya
Abstract: தமிழர் ஆடல் மரபிலே தனித்த ஒரு வடிவமாகத் திகழ்வது நாட்டியநாடகம். இது தமிழர் பாரம்பரியத்திலே நீண்ட ஒரு வரலாற்றினைக் கொண்டது. ஆயினும் காலத்திற்குக்காலம் ஏற்படுகின்ற பண்பாட்டுக்கலப்புக்கள் கலப்புக்கள் கலைமரபுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த, தவிர்க்கமுடியாதவாறு சில மாற்றங்னயை இக்கலை மரபும் உள்வாங்கியிருக்கின்றது என்றால் தவறில்லை. இந்த வகையிலே இலங்கையிலே தமிழ்ப்பண்பாடு அதிகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற வடபுலமாகிய யாழ்ப்பாணத்தினை ஆய்வுக்குரிய களமாகக் கொண்டு, அங்கு உருவாக்கம் பெற்ற நாட்டிய நாடக எழுத்துருக்களையும் படைப்புக்களையும் ஆய்வுத்தளமாகக் கொண்டு அவ்வாய்வுக்கட்டுரை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இலகுவான புரிதலுக்காக 1990 காலப்பரப்பினை புள்ளியாகக் கொண்டு முன், பின் என்கினற வகையிலே மேடையயேற்றப்பட்ட நாட்டியநாடகங்களின் எழுத்துருக்களை ஒப்புநோக்குவதாக இவ்வாய்வுக்கட்டுரை நகர்கின்றது. இலங்கையின் வடபுலத்தைப் பொறுத்தவரையிலே 1990 காலப்பகுதியானது அரசியல், சமூகம், பொருளாதாலம், பண்பாடு எனப்பல தளங்களிலே பல மாற்றங்கள் ஏற்கட்ட ஒருகாலமாகக் காணப்படுவதாலும், கலை எனப்படுவது 'காலத்தின் கண்ணாடி' என்கின்ற கலைத்தத்துவத்திற்கமைவாகவும் இந்த மையப்புள்ளி தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10790
ISBN: 978 – 624 – 5709 – 14 - 4
Appears in Collections:Department of Music



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.