Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10966
Title: வாசிப்பை ஊக்குவிப்பதில் சுன்னாகம் பொது நூலக சிறுவர் பகுதியின் செயற்பாடுகள்
Authors: Jeyalakshmi, S.
Keywords: சிறுவர்நூலகம்;பொம்மைநூலகம்;வாசிப்புப்பழக்கம்
Issue Date: 2024
Publisher: Library, University of Jaffna
Abstract: யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கீழ் சுன்னாகம் பொது நூலகமானது இயங்கி வருகின்றது. இந்நூலகமானது தரம் II நிலையிலுள்ளது. இன்றைய உலகம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் நவீனமயமாக்கலுக்கு உட்பட்ட சமூகங்களைக் கொண்டுள்ளது. இச் சமூகங்களில் வாசிப்புப் பழக்கம் குறைவடைந்து, வேறு பல புதிய விடயங்களில் மக்கள் தமது நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் இணையத்தளங்களில் மூழ்கி இணைய விளையாட்டுக்களில் தமது நேரத்தினை செலவிடுகின்றனர். எனவே, சமூகத்தினைச் சீர்ப்படுத்த சிறுவயதிலிருந்தே வாசிப்புப்பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும். அத்துடன், தற்போதைய கல்வி முறைமைகளினாலும் வாசிப்பு செயற்பாடுகள் குறைவடைந்து செல்கின்றன. அதனை நிவர்த்தி செய்து வாசிப்பு பழக்கத்தினை அதிகரித்தல் அவசியமாகின்றது. ஆரம்பத்தில் இந்நூலகத்தின் சிறுவர் பகுதியில் 463 அங்கத்தவர்கள் இருந்துள்ளனர். அடிப்படை வளங்களுடன் செயற்பட்ட சிறுவர் பகுதியினை கவர்ச்சிகரமாக மாற்றி சிறார்களை வாசிப்பின் மீது நாட்டம்கொள்ள செய்வதற்கும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. இச் செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமானது நவீன கற்றல் முறைகளுக்கேற்ப தரமான சிறுவர் நூலகத்தினை அமைத்து இப்பிரதேச சிறார்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்துதல் ஆகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10966
Appears in Collections:ETAKAM 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.