Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10972
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Pragash, M. | - |
dc.date.accessioned | 2025-01-10T07:34:55Z | - |
dc.date.available | 2025-01-10T07:34:55Z | - |
dc.date.issued | 2024 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10972 | - |
dc.description.abstract | கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பேத்தாழை பொது நூலகமானது 2011 மார்கழி 10ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நூலக சேவையினைத் திறம்பட ஆற்றி வருவதுடன், சமூகம் சார் செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், பல்லின சமூகங்கள் வாழ்கின்ற இப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட யுத்த சூழ்நிலை, அதன் காரணமாக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்கள் போன்றவற்றின் தாக்கங்களால் சமூகங்களிடையேயான உறவில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டிருப்பதுடன், நம்பிக்கையீனங்களும் புரையோடிக் காணப்படுகின்றன. இத்தகைய காலச் சூழலில், குறித்த சமூகச் சூழலிடையே அறிவுப் பொக்கிசமாக மிளிர்ந்து கொண்டிருக்கின்ற பேத்தாழை பொது நூலகத்திற்கும் அதன் விபுலானந்தர் வாசகர் வட்டத்திற்கும், சமூகங்களிடையேயான விரிசலினை தகர்த்தகற்ற வேண்டிய பாரிய பொறுப்பு இருந்தது. அதனடிப்படையில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வாசகர்களையும், பிரதேசவாசிகளையும் ஒன்றுதிரட்டி ஒரு பொதுவெளியில் ஏற்றத் தாழ்வுகள், பாகுபாடுகள் அனைத்தையும் புறந்தள்ளி, ஒரு பொது விடயத்தினை பேசச் செய்வதனால் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டு 'நிலா முற்றம்' என்கின்ற இலக்கிய சங்கம நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அனைவருக்கும் பொதுவான இலக்கியங்களை நூலக முற்றத்தில் பௌர்ணமி இரவிலே பேசுவதென தீர்மானிக்கப்பட்டது. கால ஓட்டத்தில் இலக்கியங்களை மாத்திரமன்றி, கலை நிகழ்வுகளையும் உள்ளீர்த் துக்கொண்டு சூழவுள்ள சமூகங்களையும் கடந்து 40 மாதங்களாக அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது இந்த 'நிலா முற்றம்'. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | Library, University of Jaffna | en_US |
dc.subject | வாசகர் வட்டம் | en_US |
dc.subject | பொதுசன நூலகசேவைகள் | en_US |
dc.subject | இலக்கியத்திறன் | en_US |
dc.title | இலக்கியச் செயற்பாட்டினூடாக சமூகப் பிணைப்பினை ஏற்படுத்திவரும் 'நிலா முற்ற நிகழ்வு' | en_US |
dc.type | Conference paper | en_US |
Appears in Collections: | ETAKAM 2024 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
இலக்கியச் செயற்பாட்டினூடாக சமூகப் பிணைப்பினை ஏற்படுத்திவரும் 'நிலா முற்ற நிகழ்வு'.pdf | 95.35 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.