Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11502
Title: நுவரெலியா மாவட்டத்தின் மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் பற்றிய மதிப்பீடு
Authors: Nanthini, R.
Piratheeparajah, N.
Keywords: காலநிலை மாற்றம்;கால ரீதியான வேறுபாடு;நுவரெலிய மாவட்டம்;மழைவீழ்ச்சி;வெப்பநிலை
Issue Date: 2023
Publisher: South Eastern University of Sri Lanka
Abstract: காலநிலை மாற்றம் என்பது உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகி உள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த உலகின் முழுக் கவனமும் காலநிலை மாற்றம் குறித்த விடயங்களிலேயே மாறுகின்ற அளவுக்கு காலநிலை மாற்றம் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. நுவரெலியா மாவட்டத்தின் மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை பரம்பல் காலநிலை மாற்ற அடிப்படையில் இட ரீதியாகவும் காலரீதியாகவும் வேறுபாடுகளை அறிந்து கொள்ளலே இந்த ஆய்வினுடைய பிரதானமான நோக்கமாகும்.அந்த வகையில் ஆய்வுக்கான தரவுகள் வளிமண்டலவியல் திணைக்களத்தில் ; மூலம் 1992 தொடக்கம் 2022 வரையான 30 வருட மாதாந்த மற்றும் வருடாந்த வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி தரவுகள் பெறப்பட்டன. சென்சின் சாய்வு மதிப்பீட்டு முறை மற்றும் மான் கெண்டல் கால ரீதியான வேறுபாடு கண்டறியும் முறை மூலம் வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு Minitab17 எனும் மென்ப்பொருள் பயன்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. 30வருட காலப்பகுதியில் அதிகூடிய வெப்பநிலை அதிகரிப்பு மார்ச் மாதம் 0.21°C ஆக காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தினுடைய வருடாந்த இழிவு வெப்பநிலை போக்கு 30வருட காலப்பகுதியில் 0.12493°C அதிகரிந்துள்ளது. இழிவு வெப்பநிலை அதிகரிப்பு பெப்ரவரி மாதம் (0.02°C) அதிகமாக காணப்படுகின்றது. குறைவான அதிகரிப்பு டிசம்பர் மாதம் (0.01°C) காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தினுடைய வருடாந்த உயர்வு வெப்பநிலை போக்கு 30வருட காலப்பகுதியில் 0.38967°C அதிகரிந்துள்ளது. உயர்வு வெப்பநிலை அதிகரிப்பு ஜீன் மாதம் (0.03°C) அதிகமாக காணப்படுகின்றது. குறைவான அதிகரிப்பு பெப்ரவரி மாதம் (0.01°C) காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தினுடைய வருடாந்த வெப்பநிலை போக்கு 30வருட காலப்பகுதியில் 0.25°Cஅதிகரிந்துள்ளது. ஐந்து அவதானிப்பு நிலையங்களில் குறுந்துஒயா, மவுஸ்ஸகெல்ல பிரதேசத்தின் மழைவீழ்ச்சி போக்கு குறைவடைந்து கொண்டு செல்கின்றது. லபுகெல்லே,அம்பேவெல, வட்டவளை பிரதேசத்தின் மழைவீழ்ச்சி போக்கு அதிகரித்துள்ளது. 31வருட காலப்பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி அதிகரிப்பு ஒக்டோபர் மாதம் 167.4 மில்லிமீற்றர் ஆக காணப்படுகின்றது. குறைந்தபட்ச அதிகரிப்பு செப்டம்பர் மாதம் 11.47 மில்லிமீற்றர் ஆக காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தினுடைய வருடாந்த மழைவீழ்ச்சி 30 வருட காலப்பகுதியில் 108.5 மில்லிமீற்றர் குறைந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு 1992 - 2022 வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தினுடைய வெப்பநிலை 0.25°C அதிகரித்துள்ளது மற்றும் மழைவீழ்ச்சி 108.5 மில்லிமீற்றர் குறைந்துள்ளது. நுவரெலியா மாவட்டம் இலங்கையினுடைய பொருளாதாரத் துறைக்கு கணிசமான அளவு பங்களிப்பினை மேற்கொண்டு வருவதால் நுவரெலியா மாவட்டத்தின் காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்வதன் மூலம் பிரதேசத்தின் உடைய பொருளாதார துறைக்கு மாத்திரமன்றி நாட்டினுடைய பொருளாதார வளரச்சிக்கும் நன்மை அளிக்கும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11502
ISSN: 1391-6815
Appears in Collections:Geography



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.