Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12237Full metadata record
| DC Field | Value | Language |
|---|---|---|
| dc.contributor.author | Priyatharsini, S. | - |
| dc.contributor.author | Ahilan, P. | - |
| dc.date.accessioned | 2026-02-24T08:17:13Z | - |
| dc.date.available | 2026-02-24T08:17:13Z | - |
| dc.date.issued | 2025 | - |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12237 | - |
| dc.description.abstract | கடந்த கால சம்பவங்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பேசுபொருளாகவே கலை என்பது காணப்படுகின்றது. அந்தவகையில் இலங்கையில் காலம் காலமாகப் பேசப்படுகின்ற வரலாறானது எவ்வாறு கலையுடன் தொடர்புள்ளது என்பதனை எடுத்துக்காட்டும் விதமாக அனுராதபுரத்தினை மையமாகக்கொண்டு குறிப்பாக அனுராதபுர அருங்காட்சியகத்தில் தேசியவாதம் என்ற எண்ணக்கருவினை பழமையான தொல்பொருட்களை முதன்மையாகக் கொண்டு அதன்மூலம் தேசியவாத சிந்தனை வெளிப்பாட்டு முறையினை அருங்காட்சியகம் கட்டமைக்கும் காட்சிப் படிவத்தினை எவ்வாறு தேசியவாதம் என்ற கதையாடலினூடாக கட்டமைக்கப்படுகின்றது என்பதனை எடுத்துக்காட்டுகிறது. அருங்காட்சியகம் என்பது கலை, கலாச்சார ரீதியாக அல்லது அறிவியல் ரீதியாக பழமை வாய்ந்த பொருட்களைச் சேகரித்து பாதுகாத்துக் காட்சிப்படுத்தும் இடமாகும். அந்தவகையில் வரலாற்றில் அருங்காட்சியகங்கள் தேசியவாத எழுச்சியின் பொறுப்பாற்றுக் குறியீடுகள் ஆகும். அதன் அடிப்படையில் இலங்கையில் காலணியத்தினால் உருவான தேசியவாதச் சிந்தனையானது அருங்காட்சியகங்களின்; ஊடாகக் கட்டமைக்கப்பட்டு, கருத்தியல் சாய்வுகள் என்பவை இலங்கையின் கலாச்சார வரலாற்றில் முக்கிய நகரமாக விளங்குகின்ற அனுராதபுரத்தினை மையமாகக்கொண்டு அருங்காட்சியகங்கள் சமகால பிரச்சினைகள் புதிய கண்ணோட்டத்தில் ஆராயும் தளம் என்ற ரீதியில் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் முறை, நடைமுறையில் காணப்படும் கதையாடல்கள் மற்றும் ஆதிக்க கருத்துக்களைப் பிரதிபலிக்கும் விதமாக அருங்காட்சியகங்கள் உள்ளோட்டங்கள் செயல்படுவதற்கான விமர்சனப் பார்வையானது பல்வேறுபட்ட வடிவங்களில் அருங்காட்சியங்கள் காணப்பட்டாலும் தொல்லியல் என்பது இலங்கையில் முக்கியமான ஒன்றாக காணப்படுவதனால் தொல்லியல் அருங்காட்சியகங்களில் அனுராதபுரத்தினை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அனுராதபுரத்தின் அருங்காட்சியகத்தில் தேசியவாத சிந்தனையானது மறைமுகமாகப் பார்க்கப்படுகின்றது என்பதனை அருங்காட்சியகத்தின் கட்டமைக்கப்பட்ட காட்சி படிமங்களுக்கு ஊடாக காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் கட்டமைக்கப்பட்ட காட்சிப்படுத்தலில் எட்டுக் காட்சி கூடங்களிலும் அருங்காட்சியகம் அனுராதபுரம் பௌத்த சமயத்தை ஒட்டித் தொல்பொருள் படிமங்கள் அதிகமாகக் காணப்படுவதனால் மேலாதிக்கம் என்பது எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை காணக் கூடியதாக உள்ளது. அதன் மூலம் அதிகாரமானது இலங்கையில் மேலாதிக்கத்தின் மீது செயல்படுத்தப்பட்ட விதத்தினை அருங்காட்சியத்தின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இதனை ஆய்வில் தேசியவாதம் என்பது பற்றியும், அருங்காட்சியகத்தின் செயற்பாட்டு விதத்தினையும், அருங்காட்சியகத்தில் பக்கச் சார்பான அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளதையும், காட்சிப் படிமத்தில் காணப்பட்டுள்ள தேசியவாதக் கட்டமைப்பு, பல்லின சமூகத்தில் ஒற்றைத் தன்மையின் பேசும் பொருள என்பது எவ்வாறு ஒரு பக்கச் சார்பாக செய்யப்பட்டுள்ளது என்பதனை குறு வினாக்களூடாகக் காணக்கூடியதாக உள்ளது. ஆய்வானது அன்டர்சனின் “கற்பனையாக்கப்பட்ட சமூகம்” (Imagined communities) என்ற ரீதியில் தேசத்தை கவனித்தல், பூக்கோவினுடைய அதிகார செயலாற்று முறை அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப அதிகாரத்தை வெளிப்படுத்தப்படும் கருத்தாடல்கள் என்பவை அருங்காட்சியகக் காட்சிப் படிமத்தில் செயற்பட்டு இலங்கையில் மேலாதிக்கச் சிந்தனை வெளிப்படுத்தப்பட்டுள்ள தன்மையினையும் காணக்கூடியதாக உள்ளது. மேலும் மார்க்சியத்திற்கு எதிரான தேசியம் என்ற ரீதியிலும் ஆய்வினை நோக்கக்கூடியதாக இருந்தது. பின்நவீனத்துவக் கோட்பாடுகளுக்கு அமைய இவ்வாறு தேசியவாதச் சிந்தனை மறைமுகமாகப் பேணப்பட்டு வருகின்றதனை கட்டவிழ்த்துப் பார்க்கக் கூடிய விதத்தினை ஆய்வின் மூலமாக எடுத்துக்காட்டலாம். எனவே அனுராதபுர அருங்காட்சியத்தினை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காட்சிப்படிமத்தில் மேலாதிக்கச் சிந்தனையாக பௌத்தமத காட்சிப்படுத்தலின் மூலம் ஒற்றைத்தன்மையானது மறைமுகமாகப் பேசப்பட்டிருப்பதனை அனுராதபுர தொல்பொருள் அருங்காட்சியகத்தினை; வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. | en_US |
| dc.language.iso | en | en_US |
| dc.publisher | Faculty of Arts University of Jaffna, Sri Lanka | en_US |
| dc.subject | தேசியவாதம் | en_US |
| dc.subject | கருத்தாடல் | en_US |
| dc.subject | அதிகாரம் | en_US |
| dc.subject | மேலாதிக்கம் | en_US |
| dc.subject | பக்கச்சார்பு | en_US |
| dc.title | தேசியவாதத்தை எடுத்துரைத்தல்: அனுராதபுர தொல்பொருளியல் அருங்காட்சியகம் | en_US |
| dc.type | Conference paper | en_US |
| Appears in Collections: | URSA 2025 | |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| தேசியவாதத்தை எடுத்துரைத்தல், அனுராதபுர தொல்பொருளியல் அருங்காட்சியகம்.pdf | 182.1 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.