Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12918| Title: | யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் மரபுவழிச் சீர்மியம் |
| Authors: | Visakaruban, K. |
| Keywords: | உளமருத்துவம்;சீர்மியம்;பண்பாடு;மந்திர சமய மருத்துவம் |
| Issue Date: | 2022 |
| Publisher: | University of Jaffna |
| Abstract: | யாழ்ப்பாணத் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையான ஒன்றாகும். மிகவும் கட்டிறுக்கான பண்பாட்டுப் பாரம்பரியங்கள் பலவற்றைக்கொண்ட யாழ்ப்பாணத் தமிழ்ச்சமூகம். பழைமைபேணுதலில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்நிய ஊடாட்டம் காரணமாக மேலைத்தேயப் பண்பாட்டு நடைமுறைகள் பலவும் இப்பண்பாட்டில் ஊடுருவிய நிலையிலும் தனக்கான தனித்துவங்கள் சிலவற்றை இப்பண்பாடு இன்றும் தக்கவைத்துள்ளதனைக் அவதானிக்க முடிகிறது. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு பண் பாட்டுக்கூறாக அமைவது மரபுவழிச்சீர்மிய நடைமுறையாகும். மேலைப்புல மருத்துவத்தின்வழி நவீன உள ஆற்றுப்படுத்தல் சிகிச்சை நடைமுறைகள் வருவதற்கு முன்பே யாழ்ப்பாணத் தமிழரிடையே வளமான ஒரு மரபுவிச்சீர்மியப் பாரம்பரியம் (Traditional Councilling Mechanisim) ஒன்று வழக்கில் இருந்து வந்துள்ளதனைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இக்கட்டுரையானது யாழ்பாணத் தமிழரிடையே குறிப்பாக இந்துக் களிடையே அன்று தொட்டு இன்றுவரை வழக்கில் இருந்துவரும் மரபு வழிச்சீர்மியங்களையும் அவற்றின் நடைமுறைகளையும் இனங்கண்டு வெளிக்கொணர் வதை ஆய்வு நோக்கங்களாகக் கொண்டுள்ளது. நேரடி அவதானம், களஆய்வுப் பணி மூலம் திரட்டிக் கொள்ளப்பட்ட முதன்மைத்தரவுகள் மற்றும் ஆய்வுப் பொருண்மை யோடு தொடர்புடைய ஆய்வுநிலை எழுத்துக்களான இரண்டாம்நிலைத் தரவுகள் என்பன விவரணஆய்வு (Descriptive Standing) முறையியலில் இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12918 |
| Appears in Collections: | Tamil |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் மரபுவழிச் சீர்மியம்.pdf | 2.95 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.