Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12919
Title: ஆறுமுகநாவலரின் அறிவியல் சிந்தனை
Authors: Selvarangitham, S.
Keywords: நாவலர்;படைப்புக்கள்;அறிவியல்;நோக்கு
Issue Date: 2022
Publisher: University of Jaffna
Abstract: அறிவியல் என்பது இயற்கையை நோக்கி, அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும், உள்ளியக்கத்தைப் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறது. ஈழத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய, தமிழ்க் கல்வியின் வாயிலாக அறிவியல் ரீதியான சிந்தனைகளை மாணவர்களுக்குப் போதித்தவர் நாவலர். சமயம், தமிழ் என்பவற்றுக்கு அப்பால் புவியியல். கணிதம், விஞ்ஞானம், பூகோளம், விவசாயம், உயிரியல் பல்வகைமை முதலிய கற்கைநெறிகளையும் தன் நூல்களின் மூலம் பதிவுசெய்துள்ளார். இவரது படைப்புக்களினூடாக இவரது அறிவியல் பார்வையினை மதிப்பீடு செய்யும் முயற்சிகள் தெளிவாகப் பார்க்கப்படாத நிலையில் இவரது அறிவியற் சிந்தனைகளை மதிப்பீடு செய்யும் நொக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்புசார் முறைமையைக் கொண்ட மைந்துள்ளதுடன். விபரணப் பகுப்பாய்வு முறை. திறனாய்வு முதலிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு நாவலரின் இலக்கியப் படைப்புக்கள் முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆய்வுத்தலைப்புடன் தொடர்புடைய கட்டுரை நூல்கள், இதழ்கள் போன்றவை துணைநிலைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12919
Appears in Collections:Tamil



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.