Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13140Full metadata record
| DC Field | Value | Language |
|---|---|---|
| dc.contributor.author | Rathikala, P. | - |
| dc.date.accessioned | 2026-10-05T06:24:44Z | - |
| dc.date.available | 2026-10-05T06:24:44Z | - |
| dc.date.issued | 2026 | - |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13140 | - |
| dc.description.abstract | குழந்தைப் பருவம் என்பது மனிதனின் அறிவு, உணர்வு, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (UN Convention on the Rights of the Child) அடிப்படையில், 18 வயதிற்கு உட்பட்பவர்களை குழந்தைகள் என வரையறுக்கின்றது. இவ்வாய்வில் குழந்தைகள் என்பவர்கள் 0-18 வயதிற்குட்பட்ட வளர்ச்சி நிலையில் உள்ளவர்களைக் குறிக்கிறது. குழந்தைப் பருவமானது அறிவாற்றல், கற்பனைத்திறன், உணர்ச்சி வளர்ச்சி, சமூக உறவுகள், பண்பாட்டு அடையாளம் ஆகியவை உருவாக்கம் பெறும் முக்கியமான வளர்ச்சிக் காலமாகும். குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சியில் கலைவழிக் கல்வி முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அறிவு சார்ந்த கற்றலுடன் உணர்வு, படைப்பாற்றல், சமூகத் திறன் என்பவற்றுடன் பண்பாட்டு விழிப்புணர்வு ஆகியவற்றையும் வளர்க்கும் திறன் கலைகளுக்கு உள்ளது. அவற்றுள் பாரம்பரிய நிகழ்த்துகைக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், குழந்தைகளின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த கல்வி ஊடகமாகக் காணப்படுகின்றது. இவ்வாய்வு, குழந்தைகளின் கற்றல், படைப்பாற்றல், பண்பாட்டு அடையாள உருவாக்கத்தில் அம்பலாங்கொடை ரூகட நாட்ய பொம்மலாட்ட மரபின் பங்களிப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வில் தரவுசார் அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொடை பொம்மலாட்டக் கலைஞர்களுடனான நேர்காணல்கள் (Ganwary Indika Gamini, Ganwary Permin, members of the Saranga Puppet Group, and Nalin Gamwari, the director of the Sri Anura Puppet Society)> பொம்மலாட்டத்துடன் தொடர்புடைய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் கண்டுபிடிப்புகள், பொம்மலாட்டத்தின் கதையாடல், இசை, அசைவு, காட்சியமைப்பு ஆகியவை குழந்தைகளின் கவன ஈர்ப்பு, மொழித்திறன், கற்பனை, படைப்புச் சிந்தனை, நினைவாற்றல், குழுவாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், சமூகப் புரிதலையும் வளர்க்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன. அம்பலாங்கொடை பொம்மலாட்டம் குழந்தைகளிடம் தமது பண்பாட்டு மரபு குறித்த அடையாள உணர்வை உருவாக்கும் ஒரு முக்கிய கருவியாக அமைகின்றது. இருப்பினும், நவீன ஊடகங்களின் அதிகரித்த தாக்கத்துடன் பாரம்பரியக் கலைஞர்களின் பற்றாக்குறை போன்ற சவால்கள் இம்மரபின் தொடர்ச்சிக்கு தடையாக உள்ளன. பாடசாலைக் கல்வி, இணைப்பாடச் செயற்பாடுகள், சமூகக் கலைத் திட்டங்களுடன் இக்கலையை இணைப்பதன் மூலம் குழந்தை மையக் கல்விக்கான பயனுள்ள மாற்றுக் கற்றல் வளமாக மீளுருவாக்க முடியும். அம்பலாங்கொடை பொம்மலாட்ட மரபு ஒரு பாரம்பரிய நிகழ்த்துகைக்கலை மட்டுமல்லாது, குழந்தைகளின் அறிவு, படைப்பாற்றல், பண்பாட்டு அடையாள உருவாக்கத்தை வலுப்படுத்தும் முக்கியமான கல்வி வளமாக மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகின்றது. | en_US |
| dc.language.iso | en | en_US |
| dc.publisher | Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna | en_US |
| dc.subject | அம்பலாங்கொடை ரூகட நாட்ய பொம்மலாட்டம் | en_US |
| dc.subject | குழந்தைகளின் கல்வி | en_US |
| dc.subject | படைப்பாற்றல் | en_US |
| dc.subject | பண்பாட்டு அடையாளம் | en_US |
| dc.subject | பாரம்பரிய நிகழ்த்துகைக்கலை | en_US |
| dc.title | குழந்தைகளின் கற்றல், படைப்பாற்றல், பண்பாட்டு அடையாள உருவாக்கத்தில் இலங்கையின் அம்பலாங்கொடை ரூகட நாட்ய (Rūkada Nātya) பொம்மலாட்ட மரபின் பங்களிப்பு - ஓர் ஆய்வு. | en_US |
| dc.type | Conference paper | en_US |
| Appears in Collections: | IRCVPA 2026 | |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| குழந்தைகளின் கற்றல், படைப்பாற்றல், பண்பாட்டு.pdf | 242.79 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.