Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13144
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorSulakkana Nirupama, B.V.T.-
dc.date.accessioned2026-10-05T07:17:38Z-
dc.date.available2026-10-05T07:17:38Z-
dc.date.issued2026-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13144-
dc.description.abstractஇசை என்பது வெறும் கலை வெளிப்பாடாக மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் பண்பாடு, மரபு, வரலாறு ஆகிய ஆன்மீக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க ஊடகமாகவும் விளங்குகின்றது. மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பல தலைமுறைகளுக்குப் பண்பாட்டு விழுமியங்களைப் பரிமாறவும் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. இசையினைக் கற்றல், கற்பித்தல் முறைகள் காலத்தின் மாற்றங்களுக்கேற்ப பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை அடைந்துள்ளன. பண்டைய காலங்களில் இசைக் கல்வி பெரும்பாலும் குருகுலம் மூலம் வழங்கப்பட்டது. இம்முறையில் குருவின் நேரடி வழிகாட்டல், தொடர்ச்சியான பயிற்சி, வாய்மொழி மரபு, தனிநபர் மையக் கற்றல் ஆகியவை முக்கிய அம்சங்களாக அமைந்தன. மாணவர் இசையறிவுடன் ஒழுக்கம், பணிவு, கலையுணர்வு போன்றனவற்றையும் குருவின் மூலம் பெற்றார். காலப்போக்கில் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியுடன் இசைக் கற்பித்தலானது நிறுவனமய முறைக்கு மாற்றமடைந்தது. பாடத்திட்ட அடிப்படையிலான கற்றல், மதிப்பீட்டு முறை, சான்றிதழ் வழங்கல், நவீன தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவை நிறுவனமய இசைக் கல்வியின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. இந்நிலையில், பாரம்பரிய குருகுல முறையின் ஆழமான பயிற்சி அணுகுமுறைகளையும், நிறுவனமயக் கல்வியின் முறையான அறிவியல் அணுகுமுறைகளையும் ஒப்பிட்டு ஆராய்வது, நவீன இசைக் கல்வியின் மேம்பாட்டிற்கு இன்றியமையாததாக அமைகின்றது. இவ் ஆய்வானது, இசை கற்றலில் குருகுலமுறைக் கற்பித்தலின் முக்கியத்துவத்தை விளக்குவதோடு குருகுலக் கற்பித்தல் முறையினையும் நிறுவனமயக் கற்பித்தல் முறையினையும் ஒப்பீட்டு ரீதியில் ஆராயும் ஆய்வாக மேற்கொள்ளப்படுகிறது. இவ் ஆய்வின் ஆய்வுப்பிரச்சனையானது, குரு-சிஸ்ய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட குருகுல முறையின் தனித்துவமான கற்றல் அனுபவங்கள் நவீன நிறுவனமயக் கல்வி முறையில் எந்த அளவிற்கு பிரதிபலிக்கின்றன என்பதையும், இரு கல்வி முறைகளினதும் பலம், வரம்பு ஆகியவற்றை ஒப்பீட்டு ரீதியில் ஆராய்வதையும் மையமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக இசை அறிவுப் பரிமாற்றம், தனிநபர் மையக் கற்றல், பயிற்சியின் ஆழம், ஒழுக்கம், மேடை அனுபவம், தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற அம்சங்கள் ஆராயப்படுகின்றன. குருகுலமுறைக் கற்பித்தலின் சிறப்பம்சங்களை ஆராய்தல், நிறுவனமயக் கற்பித்தல் முறையின் இயல்புகளை விளக்குதல்,, எதிர்கால இசைக் கல்விக்கான பொருத்தமான அணுகுமுறைகளை முன்வைத்தல் ஆகியன இவ் ஆய்வின் நோக்கங்களாகும். ஆய்வு முறையியலாக தரவியல் ஆய்வு, வரலாற்று ஆய்வு, ஒப்பீட்டு ஆய்வு, நூலாய்வு, ஆவணப் பகுப்பாய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், இசைக் கல்வி தொடர்பான ஆவணங்கள், அறிஞர்களின் கருத்துக்கள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின் கண்டறிதல்களாக, குருகுல முறையின் நிலையான மதிப்புகள், நிறுவனமயக் கல்வியின் சமூகப்பங்களிப்பு ஆகியன கண்டறியப்பட்டதோடு, இரு முறைகளையும் இணைத்தல் எதிர்கால இசைக் கல்விக்கு சிறந்த அணுகுமுறையாகும் என்பது ஆய்வின் முடிவாக முன்வைக்கப்படுகின்றது.en_US
dc.language.isoenen_US
dc.publisherSir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffnaen_US
dc.subjectகுருகுலம்en_US
dc.subjectகற்பித்தல் முறைen_US
dc.subjectநிறுவனமயம்en_US
dc.subjectகுருen_US
dc.subjectசிஸ்யன்en_US
dc.subjectஇசைக் கல்விen_US
dc.subjectஅணுகுமுறைen_US
dc.titleஇசை கற்றலில் குருகுலம், நிறுவனமய கற்பித்தலின் முக்கியத்துவம் ஒப்பீட்டு ஆய்வுen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:IRCVPA 2026



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.