Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2632
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Poologanathan, P. | - |
dc.date.accessioned | 2021-04-22T05:57:05Z | - |
dc.date.accessioned | 2022-06-29T06:55:19Z | - |
dc.date.available | 2021-04-22T05:57:05Z | - |
dc.date.available | 2022-06-29T06:55:19Z | - |
dc.date.issued | 2014 | - |
dc.identifier.issn | 2279-1922 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2632 | - |
dc.description.abstract | மெய்யியலில் முதன்மைக்குரிய பகுதிகளில் ஒன்றாக அறிவாராய்ச்சியியல் அமைந்துள்ளது. இது ஆங்கிலத்தில் Epistemology என அழைக்கப்படுகிறது. Episteme என்பது அறிவையும் Logos என்பது முறையான ஆராய்ச்சி எனவும் பொருள் கொள்ளப்பட்டு அறிவு பற்றிய முறையான ஆராய்ச்சி அறிவாராய்ச்சியியல் என அழைக்கப்படுகிறது. இவ்வாய்வுத் துறையானது அறிவென்றால் என்ன? நாம் எவ்வாறு இவ்வறிவினைப் பெறுகின்றோம்? அறிவிற்கும் அபிப்பிராயத்திற்கும் இடையிலான வேறுபாடு என்ன? நிச்சயமான அறிவினைப் பெறுதல் சாத்தியமா? எனும் மேற்படி வினாக்களுக்கு விடைதேடுமோர் ஆய்வுத்துறையாக அறிவாராய்ச்சியியலைக் குறிப்பிடலாம். அறிவாராய்ச்சியியல் தொடர்பான பிரச்சினைகள் ஆதி கிரேக்கத்திலிருந்து தோற்றம் பெற்றிருப்பினும் இது தொடர்பான தீவிர ஆராய்ச்சிகள் நவீன காலத்திலே இடம்பெற்றன. குறிப்பாக, இக்காலத்தில் தோன்றிய அறிவு முதல்வாதிகள், அனுபவமுதல்வாதிகள், கான்ட் போன்றோர்களின் ஆய்வில் அறிவு பற்றிய ஆராய்ச்சி சிறப்பிடம் பெறுகின்றது. அறிவுமுதல் வாதிகளான டேக்காட், ஸ்பினோசா, லைப்பினிஸ்ட் போன்றோர் அறிவு உடன் பிறந்ததாக எமது உள்ளத்தில் காணப்படுகிறது எனவும் அது நியாயத்தினால் விருத்தி செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டனர். நியாயவாதிகளின் இக்கருத்தினை ஏற்காத அனுபவவாதிகளான ஜோன் லொக், பார்க்ளி, டேவிட் கியூம் போன்றோர் நியாயவாதிகளின் கருத்தினை மறுத்து அதாவது உடன் பிறந்த எண்ணங்கள் உண்டு என்பதை மறத்து அனுபவத்தினூடாகவே அதாவது புலனுணர்வினூடாகவே நாம் நிச்சயமான அறிவினை பெற முடியும் எனும் கருத்தினை முன்வைத்தனர். இதில் குறிப்பாக அனுபவமுதல்வாதியாகிய ஜோன் லொக் தனது நூலான மனித அறிவு பற்றிய கட்டுரையில் Essay concerning human understanding உடன் பிறந்த எண்ணங்கள் உண்டு என்பதை முற்றாக மறுத்துரைத்து அறிவினைப் பெறுவதில் அனுபவத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தியமையைக் காணலாம். இவ்வாய்வினை நேர்த்தியான துறையில் வடிவமைப்பதற்கு பல ஆய்வுமுறையியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பகுப்பாய்வு முறையியல், விபரண முறையியல் என்பன பணன்படுத்தப்படுவதோடு இவ்வாய்வுக்குரிய தகவல்கள் யாவும் இலக்கிய ஆய்வுகள் மூலமே பெறப்படுகிறது. இவ்வாய்வு சார்ந்த மூலநூல்கள், உரை நூல்கள், விளக்க நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், என்பவற்றோடு இணையத்தள தகவல்கள் என்பனவற்றிலிருந்தும் தரவுகள் பெறப்பட்டு இவ்வாய்வு சரியான முறையில் வடிவமைக்கப்படுகிறது. | - |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | உடன் பிறந்த எண்ணங்கள் | en_US |
dc.subject | அறிவு முதல்வாதம் | en_US |
dc.subject | அனுபவ முதல்வாதம் | en_US |
dc.subject | அறிவாராய்ச்சியியல் | en_US |
dc.subject | நியாயித்தல் | en_US |
dc.title | அறிவாராய்ச்சியியலில் உடன் பிறந்த எண்ணங்களுக்கான மறுப்புரை. | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | Research Publication - Library |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
JUICE 2014.pdf | 2.36 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.