Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4122
Title: பெண்தலைமைத்துவ முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் பெண் வலுப்படுத்தலில் நுண்நிதியின் தாக்கம
Authors: ஜெயசீலன், ம.
சுரேஸ், ஜெ.
Keywords: பெண்வலுப்படுத்தல்;நுண்கடன்;முயற்சி யாண்மை அபிவிருத்தி;இலாபம்;வருமானம
Issue Date: 2018
Publisher: University of Jaffna
Abstract: நுண்நிதி முயற்சியாளர்களை ஊக்குவிப்பதில் நுண்நிதி நிறுவனங்களின் பங்களிப்பு நடைமுறையில் அதிகளவில் காணப்படுகின்றது. அந்த வகையில் பல நுண்நிதி நிறுவனங்கள் பெண் முயற்சியாண்மையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் வட்டி வருமானம் மூலம் இலாபம் உழைக்கவும் செய்வதோடு இவ்வாறான நிறுவனங்கள் நுண்நிதியை அதிகளவு கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் மேற்கொள்கின்றனர். நுண்நிதியானது பெண்முயற்சியாண்மையாளர்களது தொழில் விருத்தி மற்றும் முயற்சியாண்மை வலுப்படுத்தல் என்பவற்றில் எவ்வாறான தாக்கத்தை கொண்டுள்ளது என்பதை கண்டறியும் நோக்கத்தோடு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது. திருகோணமலை பட்டினமும் சூழலும் எனும் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ முயற்சியாண்மையாளர்கள் இவ்வாய்விற்காக உட்படுத்தப்பட்டுள்ளனர். பெண் முயற்சியாண்மையாளர்களிடமிருந்து தரவுகள் கட்டமைக்கப்பட்ட வினாக் கொத்துக்களைப் பயன்படுத்தியும் கலந்துரையாடல்கள் வாயிலாகவும் பெறப்பட்டது. பிற்செலவுச் சமன்பாடு, கருதுகோள் பரிசோதனை மற்றும் பெண் வலுப்படுத்தல் சுட்டி என்பன தரவுப் பகுப்பாய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற்செலவு ஆய்வின் முடிவாக முயற்சியாண்மை அபிவிருத்தியை அளவிடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சார்ந்த மாறியான இலாபத்தில் சாரா மாறிகளான நுண்கடன் அளவு, அனுபவம், சந்தை வாய்ப்புக்கள் என்பன நேரான தாக்கம் செலுத்தும் அதே வேளை தவணைக் கொடுப்பனவு, கல்வி என்பன எதிரான தாக்கத்தை செலுத்துகின்றது என கண்டறியப்பட்டது. மாதிரி உருவின் சரிப்படுத்தப்பட்ட சு2 பெறுமதியானது 0.7441 ஆகும். எனவே இவ்வாய்வின் முடிவின் படி முயற்சியாண்மை அபிவிருத்தியில் ஏற்படும் மாறலில் 74மூஆன பங்கினை தெரிவு செய்யப்பட்ட சாராமாறிகள் விளக்கி நிற்கின்றன. நுண்கடனின் பின் ஏற்பட்ட வருமான மாற்றத்தினை கண்டறிவதற்காக கருதுகோள் பரிசோதனை முடிவாக நுண்பாக நிதி பெறு முன் இருந்த வருமானத்தை விட நுண்பாக நிதியின் பிற்பாடு வருமானம் அதிகரித்தமை கண்டறியப்பட்டது. அத்துடன் பெண்வலுப்படுத்தல் சுட்டியின் மூலமாக நுண்பாக நிதி மூலம் பெண்கள் உயர்ந்த நிலையில் நேர்கணியமாக வலுப்படுத்தப்பட்டமையும் கண்டறியப்பட்டது. எனவே பெண் தலைமைத்துவ முயற்சியாண்மையாளர்களது தொழில் விருத்தி மற்றும் வலுப்படுத்தலுக்கானநுண் நிதித் திட்டங்களின் போது பொருத்தமான பயனாளிகளைத் தெரிவு செய்கையிலும், பயனாளிகள் நுண்நிதியின் அளவு மற்றும் குறித்த முயற்சியாண்மையை தொடர்பில் பூரணதெளிவு இருக்கும் பட்சத்தில்நுண்நிதி வழங்கலை ஊக்குவிக்க வேண்டும் என கொள்கை வகுப்பாளர்களுக்கு இவ்வாய்வானது பரிந்துரை செய்கின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4122
ISSN: 978-955-0585-11-3
Appears in Collections:JUICE 2018



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.