Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4173
Title: தேயிலைத் தோட்டதொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள் ஹயிற்றி கிராம சேவையாளர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு
Authors: முருகன், பொ.
Keywords: பெருந்தோட்டம்;தேயிலைச்செய்கை;தொழிலாளர்கள்
Issue Date: 2018
Publisher: University of Jaffna
Abstract: தேயிலைத் தோட்டதொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதாரபிரச்சினைகள் என்ற ஆய்வானது கண்டிமாவட்டத்தில் அம்பகமுவபிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹயிற்றி கிராமசேவகர் பிரிவினைஅடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் எத்தகைய சமூக, பொருளாதார பிரச்சினைகளினை எதிர்கொள்ளுகின்றார்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகளினை குறைத்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன தொடர்பில் தெளிவானமுறையில் ஆராய்கின்றது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார பிரச்சினைகளில் குடியிருப்புசார் பிரச்சினைகள் பிரதானமானவையாக காணப்படுகின்றன. குடியிருப்புகள் தொடர்ச்சியான முறையில் அமைந்திருப்பதனால் சுகாதார ரீதியான பிரச்சினைகள், மலசலகூடம் தொடர்பிலான பிரச்சினைகள் போன்றன ஏற்படுகின்றன. வடிகாலமைப்பு, குடிநீர், கழிவகற்றல் என்பன அனைத்து குடியிருப்புகளுக்கும் பொதுமைப்பாடானஅடிப்படையிலேயே காணப்படுவதனால், சுகாதார மற்றும் சமூகமுரண்பாடுகள் ஏற்படவும் வாய்ப்பாகஅமைகின்றது. தொழிலாளர்களினுடைய பிள்ளைகள் கல்வியினை கற்பதற்கான வாய்ப்புகளும் இப்பிரதேசத்தில் குறைவாகவே காணப்படுகின்றது. ஆரம்ப கல்வியினை அல்லது இடைநிலைக்கல்வியினை மாத்திரம் கற்று பாடசாலையில் இருந்து இடைவிலகும் தன்மையானது இப்பகுதிகளில் அதிகமாகும். பொருளாதார அடிப்படையில் குறைவான வருமானம், சுயதொழில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படல், சொந்தமாக நிலமின்மை, அரசாங்கத்தின் மூலமாக முறையான உதவிகள் கிடைக்காமை. தொடர்ந்தும் கூலித்தொழில்களிலேயே தங்கியிருக்கவேண்டிய நிலைமை காணப்படல், லீசிங் அடிப்படையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல்கள் போனற பிரச்சினைகளினை எதிர்கொள்ளுகின்றனர். ஆய்வானது ஆய்வுசார் பிரச்சினைகளினை விளக்கும் விபரணரீதியிலான ஆய்வாக அமைந்துள்ளது. அளவுசார், பண்புசார் தரவுகளினை உள்ளடக்கிய களப்புமுறையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. நேரடி அவதானம், விடயஆய்வு, நேர்காணல், வினாக்கொத்து மூலமாக முதலாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளானவை கிராமசேவரின் அறிக்கை, பெருந்தோட்ட கம்பனியின் அறிக்கை என்பனவற்றின் மூலமாக பெறப்பட்டுள்ளன. ஆய்வுக்கான மாதிரி எடுப்பானது பிரதேச அடிப்படையிலான எளிய எளுமாற்று அடிப்படையில் அமைந்துள்ளது. தேயிலைத்தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது பிரதேச அடிப்படையில் கணக்கிடப்பட்டு எளியஎளுமாற்று மாதிரி எடுப்பின் அடிப்படையில் 200 தொழிலாளர்கள் மாதிரிகளாக தெரிவுச்செய்யப்பட்டுதரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. 150 வினாக்கொத்துகள், 25 விடயஆய்வுகள், 20 நேர்காணல்கள், 05 பிரதானதகவல் வழங்குனருடனான நேர்காணல்கள் மூலமாக தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கான நாட்சம்பளம் அதிகரிக்கப்படல் வேண்டியது அவசியமாகும். மேலும் லயன் அடிப்படையிலான குடியிருப்பு முறைமை நீக்கப்பட்டு தனித்தனியாக அமைக்கப்பட்ட குடியிருப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் இவை மக்களுக்கு சொந்தமானதாக அமைக்கப்படல் வேண்டும், சட்ட அடிப்படையில் காணப்படுகின்ற வரையறைகள் நீக்கப்பட்டுபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவது அவசியமாகும். கல்வி, சுகாதாரம், உடகட்டமைப்புசார் வசதிகள் முறையாக முன்னெடுக்கப்படும் போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூகபொருளாதாரப் பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளமுடியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4173
ISBN: 978-955-0585-11-3
Appears in Collections:JUICE 2018

Files in This Item:
File Description SizeFormat 
Tamil pdf 3.pdf1.01 MBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.