Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4782
Title: தமிழர்களின் வாழ்வியலில் பனை- இலக்கியங்கள் ஊடான பார்வை
Authors: Arunthavarajah, K.
Issue Date: 2018
Abstract: இவ்வாறு நன்றியினது பயனோடு பயனையும் ஒப்பிட்டு வள்ளுவர் கூறியதிலிருந்து பனை மரத்தினது முக்கியத்துவமானது தெளிவாகின்றது. பனையுடன் தமிழ் மக்களுக்கு மிக நீண்ட காலமாகவே உறவு இருந்து வருகின்றது. இத்தகைய உறவினது நன்மைகளை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தற்காலம் வரை கிடைத்து வருகின்ற ஆதாரங்கள் எமக்கு தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இதனது பாகங்கள் அனைத்தும் மனிதனுக்குப் பிரயோசனமானவை. அதாவது 1980 களில் இத்தகைய பனையினது பயன்பாடானது ஏறத்தாழ 800ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பனை மரமானது எப்போது, எப்பகுதிகளில் முதலில் தோற்றம் பெற்றதென்பது பற்றி அறிஞர்களிடையிலே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டிருந்தாலும் கூட இவற்றினது செல்வாக்கானது தென்னாசிய நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் பனையானது தமிழ் மக்களது வாழ்வியலுடன் பண்டுதொட்டுக் கொண்டிருக்கின்ற நெருக்கமான உறவினைப் பெருமளவிற்கு இலக்கியங்களை அடிப்படையாக வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4782
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.