Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4850
Title: ஊடகங்களும் பால்நிலையும்
Authors: Poongulaly, S.
Keywords: ஊடகம்;பால்நிலை;பேசுபொருள்;சமத்துவம்;அறிக்கையிடல்
Issue Date: 2019
Abstract: ஊடகங்கள் தற்காலத்தில் பல்வேறு தளங்களில் பல்வேறு துறைகளில் பயணித்தாலும் அவற்றின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவது அவசியமான விடயமாகும். பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களைச் சேகரித்து அவற்றிளை வெவ்வேறு வடிவங்களில் மக்களுக்கு வழங்கும் கருவியாக ஊடகங்கள் அமைகின்றன. அந்தவகையில்> ஊடகங்களால் கட்டியெழுப்பப்படும் ஆரோக்கியமானதொரு சூழலே நாட்டினையும் சமூகத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்பது உறுதியானது. மக்களுக்கான கருத்துக்களைத் தோற்றுவிப்பதில் முக்கிய வகிபங்காக விளங்குவது ஊடகமாகும். அவ்வகையில் ஊடகங்களில் பால்நிலை என்னும் கருப்பொருளில் அமையும் இந்த ஆய்வானது – ஊடகங்களில் சித்திரிக்கப்படும் பெண்களும்> ஊடகங்களில் பணிபுரியும் பெண்களும் அவர்களின் வகிபங்கும் தொடர்பாக கவனத்திற் கொள்கின்றது. மேலும்> இந்த ஆய்வானது ஊடகங்கள் பால்நிலை தொடர்பான விடயங்களில் எவ்வாறான அறிக்கையிடலினை மேற்கொள்கின்றன> பால்நிலை சார்ந்த விடயதானங்கள் தொடர்பாக ஊடகங்களின் அக்கறை வெளிப்படுத்தப்படும் விதம்> அவற்றின் உள்ளடக்கம் போன்றவற்றினையும் ஆராய்வதனை பிரதான நோக்கமாகக் கொண்டமைகின்றது. பால்நிலை மையக்கருத்தினை> உலகளாவிய ரீதியில் இயங்கும் ஊடக நிறுவனங்களுடன் ஒப்பிட்டு> இலங்கை ஊடகங்களில் பால்நிலை எவ்வாறு காணப்படுகின்றது என்ற ரீதியில் தகுந்த தரவுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பால்நிலையில் உள்ள ஒப்புமை மற்றும் தனித்துவத்தினைக் கண்டறிவதாக அமைவதினால் இந்த ஆய்வானது ஒப்பீட்டாய்வு மற்றும் பகுப்பாய்வினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4850
Appears in Collections:Media Studies

Files in This Item:
File Description SizeFormat 
ஊடகங்களும் பால்நிலையும்.pdf1.41 MBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.