Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4912
Title: | ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் சேவை வழங்கல் தரமும் வாடிக்கையாளரின் திருப்தியும்: நெல்லியடி பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு |
Authors: | Sadulingam, T. Ravishankar, V. |
Keywords: | காப்புறுதி;நிச்சயத்தன்மை;வாடிக்கையாளர் தரம்;கட்புலனாகும் தன்மை |
Issue Date: | 2018 |
Publisher: | University of Jaffna |
Abstract: | ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் சேவை வழங்கல் தரமும் வாடிக்கையாளரின் திருப்தியும் இவ்வாய்வானது நெல்லியடி பிரதேசத்தினை அடிப்படையாக கொண்டது. இப்பிரதேச வாடிக்கையாளரினால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற சேவையும், இத்தகைய சேவையினால் வாடிக்கையாளரின் திருப்தியில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிவதே இவ் ஆய்வின் நோக்கமாக காணப்படுகின்றது. இவ் ஆய்வானது விபரண மற்றும் புள்ளிவிபர முறைகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்விற்காக தெரிவுசெய்யப்பட்ட ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் வாடிக்கையாளரின் மொத்த எண்ணிக்கை 1050 ஆக காணப்படுகின்றது.காப்புறுதியானது ஆயுட்காப்புறுதி, வாகனக்காப்புறுதி, பயணக்காப்புறுதி என்ற அடிப்படையில் நோக்கப்படுகின்றது.இதில் ஆயுட்காப்புறுதியே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.ஆயுட்காப்புறுதி செய்பவரின் மொத்த வாடிக்கையாளரின் எண்ணிக்கை 200 ஆகும். இவ் வகையில் நெல்லியடி பிரதேசத்தில் உள்ள ஜனசக்தி நிறுவனத்தில் அரசதுறையினர் தனியார்துறையினர் வணிகத்துறையினர் ஏனைய தொழில் செய்வோர் எனும் அடிப்படையில் 200 வாடிக்கையாளர் காணப்படுகின்றனர். அவ் ஒவ்வொரு துறையிலும் உள்ள மொத்த வாடிக்கையாளர்களில் இருபத்தைந்து வீத அடிப்படையில் 50 வாடிக்கையாளர் எழுமாறாக ஆய்வுக்காக தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்கென பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தின் மூலமும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் கையேடு என்பவற்றின் மூலமும் திரட்டப்பட்ட தரவுகள், தகவல்கள் விபரணமுறை, spss முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் சேவை வழங்கல் தரமும் வாடிகையாளர் திருப்தி மற்றும் அதிலுள்ள பிரச்சினை என்பன பற்றி விளக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வின் மூலம் நெல்லியடி பிரதேசத்திற்கு உட்பட்ட ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் சேவை வழங்கல் தரத்தின் மூலம் வாடிக்கையாளர் திருப்தி அடைந்திருப்பதோடு நிறுவனத்தின் சேவை வழங்கலின் மூலமும், வாடிகையாளர் நடவடிக்கைகளினாலும் ஜனசக்தி நிறுவனமும், பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன என்பதும் முடிவாக பெறப்பட்டது |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4912 |
ISBN: | 978-955-627-126-3 |
Appears in Collections: | Economics |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.