Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5039
Title: | சைவ சித்தாந்தம் கூறும் சத்காரியவாதம் |
Authors: | கிஷாந்தினி, தி. |
Keywords: | சைவ சித்தாந்தம்;இந்திய மெய்யியல்;சத்காரியவாதம்;சத்காரியவாதம் |
Issue Date: | 2021 |
Publisher: | University of Jaffna |
Abstract: | இந்திய மெய்யியலின் எல்லாக் கிளைகளிலுமே காரண காரியத் தொடர்பு ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. மெய்யியலாளர்கள் காரணத்துவத்தை ஆய்வுகளுக்கான ஒரு பிரதான தலையங்கமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்திய மெய்யியல் முறைமை ஒவ்வொன்றினதும் யதார்த்தம் பற்றிய கருத்தியல்இ காரண காரியத் தொடர்பு கோட்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. காரணக் கொள்கை தொடர்பான மெய்யியலாய்வுகளில் எழுகின்ற அடிப்படையான மூலப்பிரச்சினைகளில் காரியம் காரணத்தில் ஏலவே உள்ளுறைந்துள்ளதா? அல்லவா? என்ற பிரச்சினையே முதன்மையானது. இந்து மெய்யியல் முறைமைகளிடையே காரண காரியத் தொடர்புகள் சம்பந்தப்பட்ட மூன்று பிரதான கோட்பாடுகள் நிலவுகின்றன. அவையாவன சுபாவ வாதம்இ சத்காரிய வாதம்இ அசத்காரிய சாதம் எனும் மூன்றுமாகும். சத்காரிய வாதம் பரிணாமவாதம்இ விவர்த்த வாதம் எனவும்இ அசத்காரிய வாதம் ஆரம்ப வாதம்இ பிரதீத்யசமுத்பாத வாதம் எனவும் இரு வகைப்படுகின்றன. இக்கோட்பாடுகளுள் சைவ சித்தாந்தம் சத்காரியவாதம் என்ற காரண காரியக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தத்துவமாகும். காரியமென்பது காரணத்தில் உள்ளடங்காத புதியதொன்றல்ல. சடமாகிய காரணத்தில் ஏலவே உள்ளடங்கியிருந்ததே காரியமாக வெளிப்படுகிறது என்பது சித்தாந்திகளின் துணிபு. இதனடிப்படையில் இந்திய மெய்யியல் வளர்ச்சிக்கு காரண காரிய நிலைப்பாடு எத்தகைய முக்கியத்துவம் உடையது என்பதற்கு சைவத்தின் முடிந்த முடிபாகக் கொள்ளப்படும் சைவ சித்தாந்தத்தில் சத்காரியவாதம் பற்றி நோக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5039 |
Appears in Collections: | Hindu Civilization |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.