Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5124
Title: பெண் தலைமைக் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலை-கோப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு
Authors: Thenesh, S.
Uthayakumar, S.S.
Issue Date: 2017
Publisher: 6th Annual International Research Conference
Abstract: தென் ஆசியாவில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடக்கு மாகாணத்தில் கடந்த 35 வருட கால யுத்தம் மற்றும் இறுதியாக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உக்கிரமான யுத்தம் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாபெரும் இடப்பெயர்வும் அதனைத் தொடர்ந்தான மீள் குடியேற்றம் என்பனவற்றின் காரணமாக அதிகளவான அநாதைகள், விதவைகள், அங்கவீனர்கள் போன்றவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தின் அதிக சனத்தொகையையும் 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டமைந்த ஒரு மாவட்டமாக யாழ்மாவட்டம் அமைந்துள்ளது. இதில் உள்ள கோப்பாய் பிரதேச செயலர் பிரிவே ஆய்விற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் வசிக்கின்ற மொத்த சனத்தொகையில் (35874) பெண்களின் எண்ணிக்கை 18543 ஆக காணப்படுகின்றது. மேலும் இங்குள்ள 11410 குடும்பங்களில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக 1975 குடும்பங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆய்வானது பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலைமைகளினை இனங்காணுதல் என்ற பிரதான நோக்கத்தினை கொண்டதாக காணப்படுகின்றது. துணை நோக்கங்களாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூக ரீதியான அந்தஸ்தினை கண்டறிதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதார ரீதியான நிலையினை கண்டறிதல், குடும்பத்தை நடத்துவதற்கு பெண்கள் எதிர் நோக்குகின்ற சவால்களையும் பிரச்சினைகளையும் கண்டறிதல், சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையச் செய்வதற்கான தகுந்த தீர்வுத் திட்டங்களை முன்வைத்தல் போன்றனவும் காணப்படுகின்றது. ஆய்வின் கருதுகோளாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் அவர்கள் பெறுகின்ற சம்பளம் குடும்ப செலவினத்திற்குப் போதுமானதாக காணப்படவில்லை என்பது காணப்படுகிறது. ஆய்விற்கென தரவுகளை பெற்றுக் கொள்வதற்கு முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மாதிரி எடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 108 குடும்பங்களுக்கே வினாக்கொத்து வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் பெறப்பட்ட தரவுகள் பகுப்பாற்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் புள்ளி விபரண முறை (Special package for social science) பொறி முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இதன் படி பெண்கள் பெறுகின்ற வருமானத்திற்கும் அவர்களின் குடும்ப செலவினத்திற்கும்
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5124
Appears in Collections:Economics



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.