Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5129
Title: தனியார் துறை நிறுவனங்களில் பெண்கள் பெற்றுக்கொள்ளும் சம்பள முறைகளும் அவற்றின் போக்கும்
Authors: Suthesini, M.
Sivanathan, V.P.
Uthayakumar, S.S.
Keywords: தனியார்துறை நிறுவனங்கள்;பெண்கள்;சம்பளம்;கல்வித்தரம்;வேலைவாய்ப்பு
Issue Date: 2017
Publisher: AIRC 2017
Abstract: தனியார்துறை நிறுவனங்களில் பெண்கள் பெற்றுக் கொள்கின்ற வேலைவாய்ப்பானது ஏனைய துறைகளில் பெற்றுக்கொள்ளும் வேலைவாய்ப்பினை விட அதிகமாக காணப்படுகின்றது. அதாவது இலங்கையின் கிராமப் புறங்களில் விவசாய வேலைகளில் ஈடுபடும் பெண்கள் ஆண்கள் பெறும் கூலியில் அரைப் பங்கிலும் குறைவானதையே பெறுகின்றனர். நகரப்புறங்களில் வர்த்தக நிலையங்களிலும் குறைந்த சம்பளத்திற்கே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். ஒட்டு மொத்த ரீதியில் பெண்களிற்க்கு அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் தனியார் துறை நிறுவனங்களில் கூட பெண்களின் கூலி போதுமானதாக உள்ளதா? என்பதனைப் பற்றி அறிய இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டமானது 04 பிரதேச செயலர் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும் கரைச்சி கண்டாவளை பூநகரி பளை ஆகிய 4 பிரதேச செயலகர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. இந்த ஆய்வானது தனியார் துறை நிறுவனங்களில் தொழில் புரியும் பெண்களிற்கு வழங்கப்படுகின்ற சம்பள அளவுத்திட்ட முறை வேறுபடும் விதத்தினை இனங்காணுதல் என்ற பிரதான நோக்கத்தினையும் ஏனைய துணைநோக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும் முன்வைக்கப்பட்ட கருதுகோளாக தனியார் துறை நிறுவனங்களில் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளமானது அவர்களின் கல்வித்தரத்தில் அடிப்படையில் வேறுபட்டதாக காணப்படுகின்றது, சேவைக்காலத்திற்கும் சம்பள அளவிற்கும் இடையில் நேரான தொடர்பு காணப்படுகின்றது என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் முன் வைக்கப்பட்ட கருதுகோள்கள் பரிசீலனை செய்யப்பட்டு பெறப்பட்டு ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தனியார் துறை நிறுவனங்களில் தொழில் புரியும் பெண்களில் தெரிவு செய்யப்பட்ட 266 பெண்களே ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் படி SPSS என்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டு பெறப்பட்ட முடிவுகளின் படி கல்வித்தரமானது அதிகரிக்க சம்பளம் பெறும் போக்கானது அதிகரிக்கும் அதே வேளை சேவைக்காலத்தின் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது கணித ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5129
Appears in Collections:Economics



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.