Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8180
Title: பசுமைச்சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களைக் கையாள்வதில் பெண்சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
Authors: Shivany, S.
Keywords: பசுமைச்சந்தைப்படுத்தல்;சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள்;தந்திரோபாயங்கள்
Issue Date: 2016
Publisher: University of Jaffna
Abstract: பசுமைச்சந்தைப்படுத்தல் என்பது பசுமை விரும்பும் நுகர்வோருடைய தேவை, விருப்பம் என்பவற்றை இனங்கண்டு மாறிவரும் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய விதத்தில், புதுமையான வடிவங்களில் பொருட்கள் சேவைகளை உருவாக்கி அவற்றை வழங்குவதாகும். சூழலைப் பாதுகாக்ககூடிய இத்தகைய சந்தைப்படுத்தல் அணுகுமுறையானது நுகர்வோரைத் திருப்திப்படுத்துவதோடு நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்திருப்பதற்கும் வழிவகுக்கின்றது. பசுமைச்சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களானவை, நிறுவனங்கள் சந்தையில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான போட்டி நன்மையினைக் கொடுக்கின்றது. சர்வதேச சந்தையில் சிறுநடுத்தர மற்றும் நுண்கைத்தொழில் நிறுவனங்கள் தம்மைப் போட்டிச்சூழலில் தக்கவைத்திருப்பதற்கு பல பசுமைச்சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களைக் கைக்கொள்ளத் தொடங்கியுள்ளன. பெண்கள் பசுமை விரும்பும் நுகர்வோராக மட்டுமன்றி உற்பத்தியாளராகவும் பசுமைச் சந்தைப்படுத்தலுக்குப் பங்களிப்புச் செய்கின்றனர். இலங்கையில், குறிப்பாக வடமாகணாத்தில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிட்ட வீதமாக அதிகரித்துவருகின்றது. போரினால் பாதிக்கப்பட்டும், கணவனை இழந்தும் காணப்படும் பெண்கள் தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும், நாளாந்த வருமானத்திற்காகவும், சிறிய மற்றும் நுண்அளவில் தொழில் முயற்சிகளை ஆரம்பித்து நடாத்திவருகின்றனர். இவர்களில் பலர் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் சந்தையில் இருந்து விலகித் தொழில் ஸ்தம்பிதம் காரணமாக மனவிரக்தியில் உள்ளனர். இவர்களுடைய தொழில் தோல்விக்குப் பலகாரணங்கள் அடிப்படையாக இருப்பினும், பொருத்தமான சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்கள் இன்மையானது, போட்டியை எதிர்கொள்ளமுடியாமல் இருப்பதற்கு முக்கியமாக உள்ளது. இன்று போட்டியைச் சமாளிப்பதற்கும், நுகர்வோரைக் கவர்வதற்குமான, புதிய எண்ணக்கருவான பசுமைச்சந்தைப்படுத்தலானது எவ்வாறு, பெண்களால் நடாத்தப்படும் நுண்வியாபாரங்களுக்குப் பொருத்தமானது என்பதையும், தற்போது இப்பெண்முயற்சியாளர்கள் கையாளும் பசுமைத்தந்துரோபாயங்களின், பொருத்தமானதன்மையை, ஆய்வு செய்வதையும் இவ் ஆய்வு நோக்கங்களாகக் கொண்டது. இவ் ஆய்வின் ஊடாக, பெண்முயற்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் பசுமைசார்பொருள் உற்பத்திகளை நுகர்வோருக்கு இனங் காட்டுவதோடு, அவர்களுடைய பசுமைச்சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களை, சந்தைப்படுத்தல் துறையில் ஒரு புதிய அறிவாக அறிமுகப்படுத்தி, ஏற்கனவே சந்தைப்படுத்தலில் உள்ள பசுமைச்சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களில் பொருத்தமானதை அவர்களுடைய முயற்சிகளுக்கு அறிமுகம் செய்வதனை மேலதிக நோக்கமாகக் கொண்டது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பசுமைச்சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய உதவிகள் வியாபாரம் சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கூடாகவும் கிடைத்தல் அவசியமாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8180
Appears in Collections:Marketing



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.