Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8268
Title: | சர்வதேச அரசியலில் புதிய கோட்பாட்டின் எழுச்சி: ஒரு நோக்கு |
Authors: | Ganeshalingam, K.T. |
Issue Date: | 2015 |
Publisher: | University of Jaffna |
Abstract: | அதிகாரம் என்ற எண்ணக்கரு அரசியல் விஞ்ஞானத்தில் அரசுக்குரித்துடைய அம்சமாகும். அரசின் இறைமையின் வியாபகத்தன்மை அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தடையின்றி பிரயோகிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தைக் குறிப்பதாகும். அவ்வகை அரசின் அதிகாரம் எல்லை கடந்து பிராந்திய மட்டத்தில் அங்கீகரிக்கப்படுகின்ற தன்மை பிராந்திய வல்லரக அந்தஸ்தையும் சர்வதேசத்தில் அங்கீகரிக்கின்ற சூழலில் (Super Power) சர்வதேச வல்லரக என்றும் அழைக்கப்படுகிறது. அடிப்படையில் அதிகாரமே மேலாண்மை செலுத்தும் அம்சமாகும். அரசியலில் அதிகாரம் என்ற எண்ணக்கரு அரசுகளின் நடைமுறை முக்கியத்துவத்தினைக் கொண்டிருந்தாலும் கோட்பாட்டு நோக்கில் புதிய பரிமாணமெடுத்து வருகிறது. அதிகாரம் அரக்களிடமும் தாராண்மைவாத ஜனநாயக அரசுகளிடமும் சோஸலிஸ அரசுகளிடமும் பிரயோகத்தன்மையில் ஒரே அம்சமாகவே பிரதிபலிக்கின்றன. அதிகாரத்தின் பிரயோகம் அரசுகளைப் பொறுத்தவரை படைப்பல வல்லமை சார்ந்ததாகவே ஆய்வு செய்யப்படுகின்றது. இவற்றுடன் வளங்களும் தொழில் நுட்பத்திறன்களும் பாரியளவிலான ஆயுதத் தளபாடமும் ஓர் அரசின் அதிகாரத்தை அளவீடு செய்யும் காரணிகளாக விளங்குகின்றன. மக்கள் தொகை, அரசுகளின் அமைவிடம், பொருளாதார தீரியிலான வளம், தொழில் நுட்பத்திறன், அரசியல் உறுதிப்பாடு என்பன இராணுவ வல்லமைக்கு மேலும் வலுவூட்டும் அம்சமாகும். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8268 |
Appears in Collections: | 2015 JULY ISSUE 15 VOL II |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
சர்வதேச அரசியலில் புதிய கோட்பாட்டின் எழுச்சி ஒரு நோக்கு.pdf | 8.78 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.