Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8274
Title: | மேற்கத்தேய நவீனத்துவத்திற்கான இஸ்லாமிய எதிர்வினைகள் : ஒரு விமர்சன ஆய்வு |
Authors: | ஜமாஹிர், பி. எம். தெளபீக், எம். ஐ. எம். |
Keywords: | நவீனத்துவம்;மதச்சார்பின்மை;அடிப்படைவாதம்;மரபுவாதம் |
Issue Date: | Jul-2017 |
Publisher: | University of Jaffna |
Abstract: | இவ் ஆய்வுக் கட்டுரையானது இஸ்லாமிய சிந்தனையில் மேற்கத்தேய நவீனத்துவத்தின் செல்வாக்கினைக் கண்டறிய முயன்றுள்ளதோடு நவீனத்துவத்திற்கான இஸ்லாமிய பதிலிறுப்புக்களையும் ஆராய்கின்றது. நவீனத்துவமானது மரபுவாதம், கருத்தியல் மற்றும் கோட்பாட்டுவாதம் ஆகியவற்றைச் சவாலுக்குட்படுத்துகின்றது. சந்தேகமின்றி நவீனத்துவம் இஸ்லாமிய உலகத்திலும் செல்வாக்கினையும் பல வினாக்களையும் தோற்றுவித்ததையும் காணமுடிகின்றது. அதிலும் குறிப்பாக, மேற்கத்தேய நவீனத்துவக் கருத்துக்களை எதிர்கொண்ட முஸ்லீம்கள் தங்களின் சமயத்தையும் சமய வாழ்க்கையையும் எவ்வாறு அணுகவேண்டும் என்ற விடயத்தில் மீள் சிந்தனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு மேற்கத்தேய நவீன கருத்தியல்களின் பிரதிபலிப்பாகக் காணப்படும் மூன்று சிந்தனைப் பள்ளிகள் மீது கவனம் செலுத்துகின்றது. முதலாவதாக, இஸ்லாமிய நவீனத்துவம் குறித்த வியாக்கியானமாகும். இது இஸ்லாத்தின் மதச்சார்பின்மை மற்றும் நவீனத்துவம் பற்றி எடுத்துக் காட்டுகின்றது. இரண்டாவது, மேற்கத்தேய நவீன கருத்தியல்களுக்கான பதிலாக இஸ்லாமிய புத்தாக்க முயற்சிகள் அல்லது இஸ்லாமிய அடிப்படை வாதம் பற்றியதாகும். இறுதியாக, நவீனத்துவத்திற்கான மரபுவாதிகளின் அணுகுமுறை பற்றியதாகும். இந்தச் சிந்தனைப் பள்ளிகள் இஸ்லாமிய உலகத்தை மட்டுமன்றி முழு உலக ஒழுங்கமைப்பையும் மாற்றியமைத்திருப்பதும் அறியத்தக்கதாகும். ஆக, நவீனத்துவத்திற்கான பதிலாக கருதப்படும் இம் மூன்று சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்த சிந்தனையாளர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, நவீனத்துவம் மற்றும் அதற்கான இஸ்லாமிய எதிர்வினைகள், பிரதிபலிப்புக்கள், நவீனத்துவமும் இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள மற்றும் வேறுபடும் கூறுகள் பற்றிய விமர்சனப் பகுப்பாய்வை வெளிக் கொணர்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8274 |
Appears in Collections: | 2017 JULY ISSUE 17 VOL II |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
மேற்கத்தேய நவீனத்துவத்திற்கான இஸ்லாமிய எதிர்வினைகள்.pdf | 16.5 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.