Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8292
Title: | யாழ்ப்பாணப் பொருளாதாரக் கட்டமைப்பு (1930 - 1958) ஈழகேசரிப் பத்திரிகையினை அடிப்படையாகக் கொண்டது |
Authors: | Arunthavaraja, K. |
Keywords: | மலையாளப் புகையிலை வியாபாரம்;சுதேசியம்;கடலேரித்திட்டம்;கடலேரித்திட்டம்;கூட்டுறவு |
Issue Date: | 2015 |
Publisher: | University of Jaffna |
Abstract: | இலங்கையின் வடபகுதியில் அமைந்து பாரம்பரிய பொருளாதார பண்பாட்டு நிறுவனங்களுடன் அடையாளங் காணப்படுகின்ற பிரதேசமாக யாழ்ப்பாணப் பிரதேசம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டினையும் அயலில் காணப்படுகின்ற தீவுகளையும் உள்ளடக்கிய இத்தகைய பிரதேசத்தினுடைய வளர்ச்சியில் அல்லது அபிவிருத்தியில் புராதன காலந் தொடக்கம் அதனது பொருளாதார நடவடிக்கைகள் பிரதான இடத்தினைப் பெற்றுள்ளன. யாழ்ப்பாண அரசர்களுடைய காலத்திலும் சரி பின்வந்த ஐரோப்பியர்களது ஆட்சிக்காலங்களிலும் சரி அவர்களினால் யாழ்ப்பாணப் பிரதேசத்தினது பொருளாதாரத்தின் அடிப்படையினைத் தென்னிலங்கையிலோ அல்லது மலைநாட்டிலோ மேற்கொண்டதனைப் போன்று மாற்ற முடியவில்லை. மாறாக அவற்றுடன் இணைந்த வகையிலேதான் அவர்கள் தமது பொருளாதார நகர்வினையும் சுரண்டலையும் மேற்கொண்டு வந்தனரன்பதே உண்மை. இதற்கு இறுதியாக 1948 வரை இலங்கை முழுவதிலும் ஆதிக்கத்தினைச் செலுத்திய ஆங்கிலேயரும் கூட விதிவிலக்க அமையவில்லை. இத்தகைய ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியளவில் தமிழ் மக்களைச் சகல துறைகளிலும் முன்னேற்ற வேண்டுமென்ற நோக்கத்தினைப் பிரதானமாக முன்னிறுத்தி, யாழ்ப்பாணத்தினைத்தளமாகக்கொண்டு வெளிவர ஆரம்பித்த ஈழகேசரி என்ற தமிழ் வார வெளியீட்டின் ஊடாக அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு அல்லது பொருளாதார நிலை பற்றியும், அக்கால யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பொருளாதாரத்தினை முன்னேற்றச்செய்யும் பொருட்டு இப்பத்திரிகை தெரிவிக்கின்ற கருத்துக்கள் பற்றியும் அறிய முடிகின்றது. இவ்வகையில் இப்பத்திரிகையானது கொண்டிருந்த நோக்கங்களில் யாழ்ப்பாணத்தினது பொருளாதார அபிவிருத்தியும் ஒன்றன்பது அவதானிக்கத்தக்கது. இது அவ்வப்போது தனது வெளியீடுகளின் மூலமாகத் தேசத்தின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை அரசிற்கும் மக்களுக்கும் தெரிவித்தும் வந்தது. எனவே ஈழகேசரிப் பத்திரிகை வெளிவந்தகால (19301958) யாழ்ப்பாணப் பிரேேதசத்தினது பொருளாதார நிலையினை அறிய விரும்புகின்ற எவருக்கும் இது சிறந்த வரலாற்று ஆவணம் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8292 |
ISSN: | 2478-1061 |
Appears in Collections: | 2015 NOVEMEBR ISSUE 15 VOL III |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
யாழ்ப்பாணப் பொருளாதாரக் கட்டமைப்பு.pdf | 16.99 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.