Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8334
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorPathmashani, K.-
dc.date.accessioned2022-10-27T06:34:30Z-
dc.date.available2022-10-27T06:34:30Z-
dc.date.issued2017-
dc.identifier.issn2478-1061-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8334-
dc.description.abstractமானிட வாழ்க்கைக்கு அடிப்படையான உணவு, உடை, உறையுள் ஆகியவை இன்றியமையாதவை என்பது யாவரும் அறிந்ததே. இவற்றுள் உணவுக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் உணவின்றி மனிதனால் உயிர் வாழ முடியாது என்பதனாலாகும். உணவு உடலுக்கு சக்தியயும், வளர்ச்சியையும், பாதுகாப்பையும் வழங்குகின்றது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத திண்ம, திரவ, அரைத்திண்மப் பதார்த்தங்களையே உணவு என வரையறுக்கப்படுகின்றது. பாரம்பரிய உணவு என்பது ஆரம்ப காலத்திலிருந்தும் மரபு ரீதியாகவும் பண்பாட்டு கலாச்சார அடிப்படையிலும் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களினால் தயாரிக்கப்படுதல் பாரம்பரிய உணவு எனப்படுகின்றது. உடன் உணவு என்பது குறைந்த நேரத்தில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை உண்பதற்கு ஏற்ப தயாரித்து விற்பனை செய்தலையே உடன் உணவு என்பர். (சிவசண்முகராஜா. சே , 20020. 13) உணவின் தரங்களை அடிப்படையாகக் வைத்து பாரம்பரிய உணவினையும், உடன் உணவினையும் ஒப்பிட்டு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதுவாகும். உணவின் தரங்களாக போசனைப் பொறுமானம் சுகாதாரப்பாதுகாப்பு, தோற்றம், நிறம், மணம், தன்மை, இழையமைப்பு, சுவை போன்றவை பாரம்பரிய உணவுகளிற்கும் உடன் உணவுகளிற்கும் எவ்வாறு விஞ்ஞான ரீதியில் தாக்கம் செலுத்துகின்றன என்பதனை இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பிரதேசத்தை ஆய்வுப் பிரதேசமாகக் கொண்டும், மக்களின் பாரம்பரிய , உடன் உணவுப் பழக்கவழக்கத்தினை மையமாகக் கொண்டும் யாழ்ப்பாண மக்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள வலிதென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வயது அடிப்படையில் 25 பெண்பிள்ளைகளையும் (6-20) 25 யுவதிகளையும் (25 - 40) எழுமாறாக தெரிவு செய்து, அவர்களின் பாரம்பரிய உணவு, உடன் உணவு போன்ற இரண்டு உணவுகளையும் உட்கொள்ளும் பெண்பிள்ளைகளையும் யுவதிகளையும் தெரிவு செய்து இவ்விரு சாராரினதும் உட்கொள்ளும் உணவுகளுக்கிடையிலும் தரத்தின் அடிப்படையிலும் எத்தகைய வேறுபாட்டை உணருகின்றனர் - ஏன் பாரம்பரிய உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதனை ஆராய்வதற்கும், தகவல்கள் சேகரித்தல் மூலம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவு சேகரிக்கும் கருவிகளாக வினாக்கொத்துக்கள், கலந்துரையாடல்கள், அவதானிப்புமுறைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவாக பாரம்பரிய உணவின் பெறுமதியை உணர்ந்து ஆரோக்கியமான சுகதேகியாக வாழ்வதற்கு எமது உணவுப்பழக்கவழக்கங்களை பாரம்பரிய உணவுமுறைகள் எம்மை விட்டு மறைந்து போகாமல் பேணி பாதுகாப்பதுடன் எமது ஆரோக்கியத்தை பேணி வழமான வாழ்வு வாழமுடியும் என்பதனையே கண்டு கொள்ள முடியும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectஉணவு திண்மபதார்த்தம்en_US
dc.subjectதிரவபதார்த்தம்en_US
dc.subjectஅரைத்திண்ம பதார்த்தம்en_US
dc.subjectஉடன் உணவுகள்en_US
dc.subjectபாரம்பரிய உணவுகள் உணவுகளின் தரம் உணவு பழக்கவழக்கம்en_US
dc.titleயாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளினதும் உடன் உணவுகளினதும் உணவுத் தரம் குறித்த ஒரு விடய ஆய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:2017 FEBRUARY ISSUE 17 VOL I

Files in This Item:
File Description SizeFormat 
யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு.pdf10.02 MBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.