Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8428
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorSivasamy, V.-
dc.date.accessioned2022-11-09T05:43:46Z-
dc.date.available2022-11-09T05:43:46Z-
dc.date.issued1983-11-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8428-
dc.description.abstractஇந்திய இசையும், நடனமும் மிகத் தொன்மையானவை; வளம் மிக் கவை; காலந்தோறும் பல்வேறுபட்ட கலைஞர்களும், புலவர் பெருமக்களும், புரவலரும், பொதுமக்களும் இவற்றிக்குப் பலவகையான தொண்டுகளை ஆற்றிவந்துள்ளனர். இவற்றிலே சாஹித்தியம், கோட்பாடு, செய்கைமுறை, தாளம் ஆகியன முக்கியமான அமிசங்களாகும். இசையினை நோக்கும் போது, மேற்குறிப்பிட்ட அமிசங்கள் யாவற்றையும் நன்கு விளக்கி ஆக்கபூர்வமான கலைப்படைப்புகளை உருவாக்கும் கலைஞரின் எண்ணிக்கை மிகக்குறைவே. இசை, நடன அமிசங்களுடன் இலக்கிய ரீதிலும் சிறப்பான படைப்புகளை ஆக்குவோரின் எண்ணிக்கை மேலும் குறைவே. இசை லக்ஷணங்களும், நடன இயல்புகளும், இலக்கியச் சிறப்புகளும் ஒருங்கே முர ணின்றி இணைந்து இலங்கும் படைப்புகள் இந்திய மொழிகள் பலவற்றி லும் உள்ளன. இத்தகைய படைப்புகளில் ஒன்றாகவே சம்ஸ்கிருத மொழி யிலே ஜயதேவர் இயற்றிய கீதகோவிந்தம் மிளிர்கிறது. இவர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். கிழக்கு இந்தியாவிலுள்ள வங்காளம், மிதிலா, ஒரிசா ஆகிய இடங்கள் இவரைத் தத்தம் இடங்களைச் சேர்ந்தவர் எனக்கூறிப் பெருமைப்படுகின்றன. எனி னும், இவர் அக்காலப்பகுதியிலே வங்காளம், ஒரிசா முதலிய இடங்களில் ஆட்சிசெய்த லக்ஷ்மணசேனனின் அவையினை அலங்கரித்தார்; இவர் பிரா மண குலத்தவர்; உமாபதிதர, சரண, கோவர்த்தன, தோய் என்போர் இவரின் சமகாலப் புலவர்கள் என்பது கீதகோவிந்தத்தினாலும், சாசனத் தினாலும், அறியப்படும். இவர்களும் மேற்குறிப்பிட்ட அரசனின் அவைக் களப் புலவராவர். ஜயதேவர் மேற்கு வங்காளமா நிலத்திலுள்ள கெந்து பில்வ3 (கெந்துலி) எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், போஜதேவ , ரமாதேவீ ஆகியோர் இவரின் பெற்றோர் என்பதும், அகச்சான்றாலறியப் படும்; இவரின் பிறப்பிடமான கெந்துலி இன்றும் யாத்திரைக்குரிய புனித இடமாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் இவருக்குப் பெருவிழா எடுக்கப்படுகிறது. இவரின் மனைவி பத்மாவதி ஒரு நடனமாது; தேவ சர்மா, விமலாம்பா ஆகியோரின் மகள். ஜயதேவரின் பாடல்களுக்குப் பத்மாவதி பூரியிலுள்ள ஜகந்நாதர் ஆலயத்தில் நடனம் ஆடிவந்தார் என அறியப்படுகின்றது.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleஇந்திய இசை, சமய, இலக்கிய மரபுகளில் ஜயதேவர் - ஓர் ஆய்வுஇந்திய இசை, சமய, இலக்கிய மரபுகளில் ஜயதேவர் - ஓர் ஆய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:1983 NOVEMBER ISSUE 3 Vol I



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.