Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8451
Title: கிறிஸ்தவத் தமிழ் நாவல்களும் சமுதாய விழிப்புணர்வும்
Authors: Chandrakanthan, A.J.V.
Issue Date: Mar-1990
Publisher: University of Jaffna
Abstract: பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தென்னாசிய நாடு களைத் தமது ஆதிக்கத்திற்குட்படுத்திவந்த மேற்கத்தேய அரசுகளின் அனுசரணையுடன் தமிழகத்தில் புகுந்த கிறிஸ்தவ சமயம், தமிழிலக்கி யத்தினது பரிமாண வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அகற்சியை ஏற்படுத் தியுள்ளது. அகராதிகளை ஆக்குவது முதல், அம்மானைகளைப் பாடுவது ஈறாக, தமிழ் இலக்கண நூல்களை யாத்தலிலும், செந்தமிழ் காப்பியம் புனைதலிலும், நாட்டார் இலக்கிய வடிவங்களை நயம்பட வளர்த் தலிலும், மேலைத்தேய கிறிஸ்தவப் பாதிரிமார்களும், அவர்களைத் தொடர்ந்துவந்த, தமிழகக் கிறிஸ்தவ அறிஞர்களும் செப்பரும் பணியாற்றி யுள்ளனர் என்பது செந்தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு எடுத்தியம் பும் ஓர் உண்மை 1 இவர்களுள் சிலர் ''மறைவளர மொழி வளர்ப்போம்'' என்ற இலட்சியத்துடன் செயற்பட்டனரேயாயினும். பலர் தமிழ் மொழி மீது தாம் கொண்ட தணியாத நாட்டத்தினால் உந்தப்பட்டனர் என்ப தும் ஏற்கப்படக் கூடியதே. கடந்த கால் நூற்றாண்டுகால தமிழிலக்கிய வளர்ச்சியை ஆயும் போது, ஆங்கு நாவல் இலக்கியம் நயத்தகு நிலையில் வளர்ந்திருக்குமாற் றினை அவதானிக்கலாம். இக்கூற்று. ''கிறிஸ்தவ'' 2 நாவல் இலக்கியத்திற் கும் பொருந்துமெனக் கூறலாம். தமிழ் நாவல் இலக்கிய வரிசையிலே கிறிஸ்தவ நாவல்களூக்குத் தனிச்சிறப்பு உண்டு. இச்சிறப்பு, கிறிஸ்தவரல் லாத ஆய்வாளர்களினாலும், விமர்சகர்களினாலும் சுட்டிக் காட்டப்பட்டுள் ளது. 3 “கிறிஸ்தவ நாவல்'' என்று கூறும் போது அது கிறிஸ் தவர்களால் எழுதப்படுகின்ற நாவல்கள் மட்டுமே எனக்கொள்ளுதல் தவறானதாகும். கிறிஸ்தவரல்லாதவரும்கூட, கிறிஸ்தவ சமய விழுமியங்களை, கொள்கை களை, கோட்பாடுகளை உள்ளீடாகவைத்துச் சிறுகதைகளும், புனைகதை களும், நாவல்களும் யாத்திருக்கின்றனர். அவ்வாறே கிறிஸ்தவ நாவலாசிரி யர் பலர் தமது நாவல்களில் பிறசமயப் பெயர்கொண்ட பாத்திரங்ளை அச்சமயங்களின் ஆன்மீக மரபுகளுக்கேற்ப அழகுறத் தீட்டியுள்ளனர்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8451
Appears in Collections:1990 MARCH ISSUE 1 Vol IV

Files in This Item:
File Description SizeFormat 
கிறிஸ்தவத் தமிழ் நாவல்களும்.pdf13.72 MBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.