Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8452
Title: இலங்கையில் வெங்காயச் சந்தைப்படுத்தல் பற்றிய ஆய்வு
Authors: Sivanathan, P.
Issue Date: Mar-1990
Publisher: University of Jaffna
Abstract: இலங்கை மக்களின் நாளாந்த உணவுத் தேவையில் வெங்காயமும் ஒன்றாகும். இது சுவை உணவாகவும் மருத்துவ உணவாகவும் இருப்பதால் இதற்கான கேள்வி நிரந்தரமானதாகவுள்ளது. மக்கள் தொகை அதிகரிக்க இதற்கான கேள்வியும் அதிகரிக்கின்றது. இதனது விலையேற்றங்கள் மொத்தக் கேள்வியில் பெருமளவு வீழ்ச்சியை ஏற்படுத்துவதில்லை. இலங்கை மக்களின் நுகர்வுப் பழக்கத்தில் வெங்காயம் முக்கிய இடத்தைப் பெற்றிருப் பதால் இதை நிரம்பல் செய்யவேண்டிய தேவை அரசிற்கு உண்டு. இலங்கையின் வெங்காய உற்பத்தியானது மக்களின் வருட முழுவதற்குமான நுகர்வுக்குப் போதுமானதாக இல்லை என்று கூறுவதற் கில்லை. அதாவது பருவகாலங்களில் கிடைக்கின்ற வெங்காய நிரம்பல் சந்தையில் மிகையாகவும் விலைத்தளம்பலை உண்டுபண்ணுவதை கடந்த காலத் தரவுகள் காட்டுகின்றன. வெங்காய சந்தையில் உள்ள பிரச்சினை என்னவெனில் பருவகாலத்தில் கிடைக்கின்ற மேலதிக உற்பத்தியை எவ்வாறு வருடம் முழுவதற்குமான நுகர்வுக்குக் கிடைக்கக்கூடியதாக ஒதுக்கீடு செய் வது என்பதும், எவ்வாறு களஞ்சியப்படுத்துவது என்பதுமேயாகும். இது சாத்தியமாகும் பட்சத்தில் விலைத் தளம்பல், இறக்குமதி அளவு என்பவற் றில் பெரியளவான தாக்கத்தை ஏற்படுத்தலாம். வெங்காயத்தின் விலை, உற்பத்தி, சந்தைப்படுத்தல் ஒழுங்கு முறைகள், வெங்காய இறக்குமதிகள் போன்றன சந்தையில் உற்பத்தியாளர்கட்கு எத்தகைய விளைவை ஏற் படுத்தியுள்ளது. என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8452
Appears in Collections:1990 MARCH ISSUE 1 Vol IV



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.