Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8478
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Sittampalam, S.K. | - |
dc.date.accessioned | 2022-11-10T08:23:11Z | - |
dc.date.available | 2022-11-10T08:23:11Z | - |
dc.date.issued | 1976-04 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8478 | - |
dc.description.abstract | கி. மு. 3ம் நூற்றாண்டு தொடக்கம் காணப்படும் பிராமி மொழிக் கல்வெட் டுக்களே இந்நாட்டின் மிகப்பழைய கல்வெட்டுக்களாகும். ஆயிரக்கணக்கான இவை நாட்டின் பல பாகங்களிலும் சிதறிக் காணப்படுகின்றன . இவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிகள் கொண்ட மிகச்சிறிய கல்வெட்டுக்களாகும். அத் துடன் இவை பௌத்த குருமாருக்குக் கொடுக்கப்பட்ட தானத்தையும் அதை வழங்கியவர்கள் பெயரையும் கூறுகின்றன. இவ்விதம் பௌத்த மதச் சாயலுடைய இவை பௌத்தமல்லாத ஏனைய மதங்களைப்பற்றி நேரடியாக எதையும் கூறவில்லை. இருந்தும் பௌத்த சங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட தானத்தை வழங்கியவர்களின் பெயர்ப்பட்டியலை நோக்கும்போது அவர்கள் ஒரு கால் இந்து மதத்தைத் தழுவி யிருந்தார்கள் என்ற உண்மை வெளிப்படுகிறது. இதே நேரத்தில் இத்தானத்தை வழங்கியவர்கள் எல்லோரும் பௌத்தர்களாக மட்டும் தான் இருந்தனர் என்று எண்ணுதல் தவறு. சமரசமும் சமயக் காழ்ப்பு உணர்ச்சியுமற்ற அக்காலத்தில் ஒரு மதத்தவர் மற்றைய மதப் பிரிவுகளுக்குத் தானம் வழங்கப் பின் நிற்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டப் போதிய வரலாற்றுச் சான்றுகள் உள. துர் அதிஷ்ட வசமாக இக்கால இலக்கியச் சான்றுகளாகிய மகாவம்சம் போன்ற நூல்கள் கல் வெட்டுச் சான்றுகளை விரிவுபடுத்துவதில் பெரிதும் உதவவில்லை. காரணம் பௌத்த சங்கத்தின் வரலாற்றினைக் கூறும் நோக்கமாகவே இந்நூல் எழுதப்பட்டது என்ப தனை இந் நூலாசிரியரே வெளிப்படையாகக் கூறியிருப்பதால் பௌத்தமல்லாத ஏனைய மதங்களைப் பற்றிய விவரத்தை விரிவாகக் கூறுவதில் அவர் ஆர்வங் காட்ட வில்லை. இக்கால இந்து சமயக் கட்டிடங்களான தொல்பொருளியற் சான்றுகளும் மிகமிக அருகியே காணப்படுகின்றன. இதற்குக் காரணம் இக்காலத்தைய இந்து மதக் கட்டிடங்களும் அழியும் பொருட்களாலேயே தான் கட்டப்பட்டன. தமிழகத் தில் இதே காலப் பகுதியில் நிலைபெற்றிருந்த இந்துக் கோயில்களைப் பற்றிச் சங்க நூல்கள் விரித்தாலுங்கூட, இவை யாவும் அழிந்து விட்டதுமல்லாமல் அவை நிலை பெற்றிருந்ததை உறுதிப்படுத்தத் தொல்பொருளியற் சான்றுகள் கூடக் கிடைக்கா மல் இருக்கும் நிலையையும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணுதல் பொருத்தமுடைத்தா கும். இந்தியாவைப் போன்று இலங்கையிலும் முதல் முதல் அழிவற்ற பொருட் களைக்கொண்டு வழிபாட்டு ஸ்தலங்களை அமைத்த மதம் பௌத்த மதமே. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | இலங்கையின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்கள் காட்டும் இந்து மதம் | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | 1976 APRIL ISSUE 2 Vol I |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
இலங்கையின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்கள் காட்டும் இந்து மதம்.pdf | 7.34 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.