Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8503
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorMathanakaran, R.-
dc.contributor.authorGunasegaram, T.-
dc.date.accessioned2022-11-11T06:23:11Z-
dc.date.available2022-11-11T06:23:11Z-
dc.date.issued1984-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8503-
dc.description.abstractபுவிச் சரித வரலாற்றுக் காலத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து மிலி யன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவியதாகக் கருதப்படுகின்ற மயோசீன் காலத் தில் யாழ்ப்பாணக் குடா நாடு கடல் பகுதியிலிருந்து மேலுயர்த்தப்பட் டது. கடல் பகுதியினுள் படிவு செய்யப்பட்ட பல்வேறு அடையல் களும், ஆழமற்ற பகுதிகளிலிருந்து உயிரினங்களும், சேதனவுறுப்புகளும், மேலுயர்த் துகையின் பின், கரைசல்பட்டு இறுகிச் சுண்ணாம்புக் கற்பாறைகளாயின. இவ்வாறு தோன்றிய சுண்ணாம்புக் கற்பாறை குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட தன்மையுடையதாகவும், வெவ்வேறு ஆழத்திலும் காணப்படுகின்றது. இதுவரை குடாநாட்டின் பல பகுதிகளின் மேற் பரப்பிலும், ஆராய்ச்சிக்காக இடப்பட்ட துளைகளின் மூலமும், குழாய்க் கிணறுகளை அமைப்பதற்குத் துளையிடப்பட்டபோதும் பெறப்பட்ட மாதிரி களை அடிப்படையாகக்கொண்டு இங்கு காணப்படுகின்ற சுண்ணாம்புக் கற் பாறையினை முருகைக் கற்பாறைத் தன்மையினைக்கொண்ட சுண்ணாம்புக் கற்பாறை என்றும், (Coralline limestone) மக்கித் தன்மையுடைய உலர்ந்த சுண்ணாம்புக் கற்பாறை என்றும், (Chalky limestone) மணல் தன்மை கூடிய (Silica content) வைரச் சுண்ணாம்புக் கற்பாறை என்றும் (Cherty limestone) மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். குடாநாட்டின் வடபகுதியில் சுண்ணாம்புக் கற்பாறைகள் உயர்த்தப்பட்ட நிலையிலும் தெற்காகவும், தென்மேற்காகவும் சாய்ந்தும் காணப்படுகின்றன. இப்பாறைகள் குடா நாட்டின் சில பாகங்களில் ஏறத்தாழ 350 அடி தொடக்கம் 450 அடி ஆழம்வரை அமைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. இவை தோன்றிய முறையில் வெவ்வேறு அடையல்களாகவும், இதில் அமைந்துள்ள உயிரின சேதனவுறுப்புகளின் காரணமாக இடத்துக்கிடம் வேறுபட்ட சேர்க்கை யினால் வேறுபட்ட அளவில் நுண்துளைமையைக் கொண்டுள்ளவையாக வும், அதற்கேற்ப நீரை உட்புகவிடக்கூடிய தன்மையுடையனவாகவும் இருக்கின்றன. அத்துடன் நீரில் கரையும் தன்மையைக் கொண்டிருப் பதனால் குடாநாட்டின் மேற்பரப்பின்கீழ் இப்பாறைகள் கரைந்து, மூட்டு களும், வெடிப்புகளும், பிளவுகளும் தோன்றியிருப்பதுடன் நீர் தேங்கி நிற் கக்கூடிய குகைகளையும், இடைவெளிகளையும் கொண்டமைந்துள்ளன. ஊடு புக விடக்கூடிய சுண்ணாம்புக் கற்பாறையினூடாக நீர் கீழ்நோக்கிக் கசிந்து, இத்தகைய இடைவெளிகளினூடே தேங்கி நீர்தாங்கு படுக்கையாக அமைந்துள்ளன.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleயாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணாம்புக் கற்பாறைகளை அகற்றுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:1984 MARCH ISSUE 1 Vol II



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.