Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/854
Title: பாரதியின் உரைநடையில் வடமொழிச் சொற்கள்.
Authors: Srisatkunarasa, S.
Keywords: ஞானரதம்;ஒலியனியல்;உருபனியல்;வடமொழி
Issue Date: 2014
Publisher: Jaffna University International Research Conference
Abstract: பாரதியின் உரைநடைகள் கதைகளாகவும், கட்டு;ரைகளாகவும் பல காணப்படுகின்றன. ‘சந்திரிகையின் கதை’, ‘சின்னச் சங்கரன் கதை’, ‘ஞானரதம்’ என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கன. பாரதியின் உரைநடைப் படைப்புக்களுள் ஒன்றான ஞானரதத்தில் பல வடமொழிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு கற்பனைச் சித்திரம். இதன் பல அத்தியாயங்கள் வடமொழித் தலைப்புகளையே கொண்டுள்ளன. ஞானரதத்தில் இடம்பெற்றுள்ள வட மொழிச் சொற்களே முக்கியமாக இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவ் வடமொழிக் கடன் சொற்களை ஒன்று திரட்டுவதும், பாரதி அவற்றை எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைக்காட்ட அவை அடைந்துள்ள ஒலியியல், ஒலியனியல், உருபனியல் மாற்றங்களை இனங்காண்பதும், கடன் வாங்கல் பற்றிய பொது இயல்புகளுடன் இவை எந்தளவிற்குப் பொருந்துகின்றன என்பதை அறிவதும் இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு ஒரு விபரண ஆய்வாக அமைகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/854
Appears in Collections:Linguistics and English



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.