Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8566
Title: காரைக்காலம்மையாரும் அவர் பிரபந்தங்களும் -ஓர்ஆய்வு
Authors: Chandralega, V.
Issue Date: 1985
Publisher: University of Jaffna
Abstract: சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 'திருத்தொண்டத்தொகை' 1 பேயர் என்ற காரைக்காலம்மையார் பற்றிய முதற் குறிப்பைத் தருகின்றது. இது பாடலின் அரைவரியிலமைந்த மிகச் சிறிய குறிப்பாகும். 'பேயர்' என்ற ஒரு விவரத்தை மட்டுமே இது தருகின்றது. 'திருத்தொண்டத் தொகை'யை அடிப்படையாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பியால் பின்னர் பாடப்பட்ட. 'திருத்தொண்டர் திருவந்தாதி' 2 காரைக்காலம்மை யார்பற்றிய முழுப்பாடலொன்றைக் கொண்டுள்ளது. அம்மையார் காரைக் காலில் தோன்றியதையும், இறைவன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்க விரும்பாது தலையால் ஏறிச் சென்றதையும் அதைக்கண்டு இறைவன் அம்மை' என்று பாராட்டியதையும் இப்பாடல் குறிப்பிடுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8566
Appears in Collections:1985 MARCH ISSUE I Vol III



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.