Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8584
Title: | நோய் நிதானத்தில் வாத நாடியின் முக்கியத்துவம் |
Authors: | Pelasrina, A. Aadhavan, V. Sounthararajan, K. |
Keywords: | வாத நாடி;நிதானம்;எண்வகைத்தேர்வு;நோய் |
Issue Date: | 2018 |
Publisher: | University of Jaffna |
Abstract: | சித்தமருத்துவத்தில் நோயாளியை பரீட்சிக்கும் முறைகளில் “எண்வகைத்தேர்வு” இல் நாடிப் பரீட்சையானது முக்கியமாக நோய் கண்டறிதல் முன்கணிப்புக்காட்டியாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாடிப்பரிட்சையை பெரும்பாலும் உறுதிப்படுத்தல் சோதனைக்காக பயன்படுத்துகின்றனர். இதனாலே எண்வகைத்தேர்வில் கைக்குறியான நாடி இறுதியில் சித்தரிக்கப்படுகின்றது. இவ் ஆய்வின் நோக்கமானது சித்த நூல்களிலும், இணையத்தளத்திலும் வாத நாடியின் முக்கியத்துவம் பற்றிய ஓர் இலக்கிய ஆய்வின் தொகுப்பை சேகரித்தலாகும். இதற்காக இலங்கை, மற்றும் இந்தியாவில் வெளியான புத்தகங்கள் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ நுாலகம், யாழ் பல்கலைக்கழக நூலகம், யாழ் பொது நூலகம் என்பவற்றிலிருந்தும் சித்த வைத்தியர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன. உடம்பிலுள்ள ஏழு உடற்தாதுக்களை இயக்கும் மூன்று உயிர்தாதுக்களின் சக்தியை குறிப்பதுவே நாடி. தனிநாடி என்ற ரீதியில் வாத, பித்த, கப நாடியும், தொந்த நாடியில் வாதபித்த, வாதகப, பித்தகப பித்தவாத, கபவாத, கபபித்த நாடியும், சன்னி பாத நாடியில் வாதபித்தகப நாடியும் அடங்கும் வாதமானது பிருதுவி, அப்பு பஞ்சபூதத்தாலானது. சூட்சுமம், வறட்சி, வக்கிர கதியை உடையது இடகலை, சமானவாயு சேர்கையாலானது. சாதாரணமாக வாத நாடி ஆட்காட்டி விரலிலும், பித்த நாட் பெரு விரலிலும், கப நாடி பௌத்திர விரலிலும் உணர்த்தப்படும். பஞ்சபூதநாடியிலும் ஆள்காட் விரலினால் உணர்த்தப்படும் துடிப்பு வாதமாகும். இதனது நடையை அன்னம், கோழி, மயி என்னும் பறவைகளின் நடையுடன் ஒப்பிடப்படுகின்றது. இத்தகைய ரோக கணிப்பீட்டில், இது ஓ செலவற்ற முறையாகவும், நோயாளியை கஸ்டப்படுத்தாமல் செய்யக்கூடியதாகவும், இலகுவான பரீட்சைமுறையாகவும் நம்பகமான கணிப்பீட்டை பெறக்கூடியதாகவும் உள்ளது. இவ்வாய்வான எதிர்காலத்தில் நோயாளிகளை பரீட்சித்து ஆய்வுகள் மேற்கொள்ள உதவும். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8584 |
Appears in Collections: | Siddha Medicine |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
நோய் நிதானத்தில் வாத நாடியின் முக்கியத்துவம்.pdf | 1.14 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.