Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8733
Title: | பௌத்த களத்தில் கிறித்தவ இறையியல்: லின் டீ சில்வாவின் இறையியல் அணுகுமுறை |
Authors: | Henry Victor, I. |
Issue Date: | 1994 |
Publisher: | University of Jaffna |
Abstract: | கிறிஸ்தவ அடிப்படை வாதம், ஏனைய சமய அடிப்படை வாதங்கள் போன்று, சமயக் கலப்புக் ( Syncretism ) குறித்த அளவு கடந்த பயத்தினையும் அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கிடையே விலகிவாழும் (Ghettoism) மனப்பாங்கை யும் வளர்ப்பதோடு, கிறிஸ்தவமல்லாத ஏனைய மறைகளையும் அவற்றின் கொள் கைகள், கோட்பாடுகளையும் கிறிஸ்தவ நற் செய்திப்பணிக்கு ஒரு தடங்கலாகவும் அச் சுறுத்தாகவும் காணவும் தூண்டுகிறது. இதற்கு மாறாகப் பௌத்த கொள்கைகள் கோட்பாடுகள் கிறிஸ்தவ நற்செய்திப் பணிக்குச் சாதகமான வாகனங்கள் அல்லது கருவிகள் என்ற கண்ணோட்டத்தைக் கிறித் தவர்கள் மத்தியில் வளர்க்க முயற்சித்தவர் களுள் அருட் கலாநிதி லின் டீ சில்வா (1919-1981) குறிப்பிடத்தக்கவர். இவர் மெதடித்த சபையைச் சேர்ந் தவர். பௌத்த சமயத்தையும் அ தன் கொள்கைகள், கோட்பாடுகளையும் நன்கு கற்றறிந்தவர். இலங்கையில் கிறிஸ்தவ, பௌத்த உரையாடலை வளர்த்தவர்களுள் ஒருவர். கொழும்பிலிருந்து வெளிவரும் உரையாடல் என்ற ஆங்கில காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியர். தனது சபையில் பணியாளர், ஆசிரியர், திருமறை மொழிபெயர்ப்பாளர் எனப் பல பணிகளை 20 யாற்றியவர். கொழும்பிலுள்ள Ecumenical Institute for Study and Dialogue என்ற நிறுவனத்தின் இயக்குனராகப் பல.ஆண்டு கள் சேவை புரிந்தவர். கிறிஸ்தவர்களின் ஒதுங்கி வாழும் தன் மையையும் மதம் மாற்றும் உத்வேகத்தை யும் லின் டீ சில்வா அதிகமாகச் சாடினார். இவரைப் பொறுத்த மட்டில் சமயக் கலப் பைவிட விலகி வாழுதலே கிறிஸ்தவர் களுக்கு அதிக ஆபத்தானது. இப்பின்ன ணியில் உருவாகிய சில்வா வின் இறையி யலில் "உரையாடல்" மையக்கருவாகின் றது. ஆதலால், ஆத்தீகத்தை ஆதரிக்கும் கிறிஸ்தவமும் நாத்திகப் போக்குடைய தேரவாத பௌத்தமும் உரை யாடு மா எனப் பலர் சந்தேகத்தோடு வினாவுகின்ற போது, லின் டீ சில்வா அது முடியுமென வலியுறுத்தியது மாத்திரமல்லாமல் அவ்வு ரையாடல் இரு சாராருக்குமே பயனுள்ளது எனவும் இடித்துரைத்துள்ளார். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8733 |
Appears in Collections: | 1994 MARCH, JULY ISEUE 1,2 Vol VI |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
பௌத்த களத்தில் கிறித்தவ இறையியல் லின் டீ சில்வாவின் இறையியல் அணுகுமுறை.pdf | 9.62 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.