Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8742
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Kanagaraja, S. | - |
dc.date.accessioned | 2022-12-08T03:19:19Z | - |
dc.date.available | 2022-12-08T03:19:19Z | - |
dc.date.issued | 1993 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8742 | - |
dc.description.abstract | வாய்மொழி மரபையும் அதனைத் தழுவிய கலாசாரத்தையும் பின்பற்றிய பல பாரம்பரிய மூன்றாம் உலக சமுதாயங்க ளில், காலனித்துவ அரசுகள் தம் புதிய மொழிகளையும், அவற்றோடு சம்பந்தப்பட்ட "மொழிப் பிரயோக முறைகளையும்(discourses)திணித்தனர். எழுத்தறிவு மரபைத் தழுவிய இந்தப் புதிய மொழிப் பிரயோகப் பரிவர்த்தனை முறைகள் வித்தி யாசமான கலாசார சமூக விழுமியங்க ளையும், சிந்தனை முறைகளையும் கொண் டிருந்தன. இத்தகைய விழுமியங்களும், சிந் தனைப் போக்குகளும் தான் விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவியல், நகரமயமாக் கம் என்பவற்றிற்கு அத்தியாவசியமானவை யாக இருந்தன என்பதை மானிடவியலா ளர் ஜக் குடி (ack Goody, 1977) வோல்ட் டர் ஒன்ங் (Walter Ong, 1967) போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். எனவே “முன் னேற்றம்", "நவீனம்" என்பவற்றின் கார ணமாகப் பல மூன்றாம் உலக எழுத்தாளர் கள் எழுத்தறிவு மரபை ஆரம்பத்தில் பிர யோகித்தாலும், தம் சுதேச கலாசாரங்க ளையும், சமூக அமைப்புக்களையும் பேணுவ தில் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் இப்போதையமரபைத் கால கட்டத்தில் எழுத்தறிவு தொடர்ந்து பிரயோகிப்பதில் ஐயங்கள் ஏற் பட்டுள்ளன. எனவே மூன்றாம் உலக எழுத் தாளரிடையே (குறிப்பாக ஆபிரிக்க எழுத் தாளரிடையே) இன்று காரசாரமாக இடம் பெறும் விவாதம் தம் இலக்கியத்தை வாய் மொழி மரபின் பண்புகளுக்கு அமையவா அல்லது எழுத்தறிவு மரபின் பண்புகளுக் கேற்பவா எழுதுவது என்பது. இந்த விவா தத்தின் அடிப்படையில் சமகாலத் தமிழ்க் கவிதையை மீள் பரிசீலனை செய்து அதில் இடம்பெறும் வேறுபட்ட போக்குகளை அடையாளம் காணுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழ்க் கவிதைகளையும், கவிதை விமர் சனத் துறையையும் நாம் பரிசீலனை செய்ய முன், வாய்மொழி மரபினதும், எழுத்தறிவு மரபினதும் வேறுபாடுகளையும், அவற்றின் பிரதான குணாதிசயங்களையும் அறிதல் வேண்டும். பேராசிரியர் டனன் (Tannen, 1982) போன்ற தற்கால சமூக மொழியிய லாளர் இவ் இரு மரபுகளினதும் செல்வாக் கால் இடம் பெறும் மொழிப் பிரயோ கத்தை அல்லது கருத்துப் பரிவர்த்தனையை பின்வருமாறு அடையாளம் கண்டுள்ளனர் | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதையில் முப்போக்குகள் | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | 1993 NOVEMBER ISSUE 3 Vol V |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதையில் முப்போக்குகள்.pdf | 13.74 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.